
அண்மையில் நடைபெற்ற பிரதமர் அலுவலக வாகன ஏல விற்பனையில் பாரிய முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக பிரபல மருத்துவ நிபுணர் ஒருவர் ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
மருத்துவ நிபுணரான காமினி ரணசிங்க என்பவர் இது தொடர்பில் கடந்த 21 ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
குறித்த கடித்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “கடந்த மே மாதம் நடைபெற்ற வாகன ஏல விற்ப னையின் போது 2014 ஆம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட போர்ட் எவரஸ்ட் கார் (CAB 3453) ஒன்றின் விலை 2.5 மில்லியன் ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
அதே போன்று கடந்த 18 ஆம் திகதி நடைபெற்ற ஏல விற்பனையின் போது அதே ரக வாகனம் (CAB 3441) ஒன்று 6.6 மில்லியன் ரூபா மதிப்பீடு செய்யப்பட்டு ஏல விற்பனை செய்யப்பட்டது.
இருப்பினும், அதே ரக வாகனம் CAN 3452) ஒன்றை நான் ஒன்பது மில்லியன் ரூபாவுக்கு ஏல விற்பனையில் எடுக்க டெண்டர் சமர்ப்பித்த போது வாகனத்தின் பெறுமதி அதனை விட அதிகம் என்று எனது டெண்டர் நிராகரிக்கப்பட்டது.
சுமார் இரண்டு மாத காலத்தினுள் ஒரே ரக வாகனமொன்றின் விலை 6.5 மில்லியன்களினால் எவ்வாறு அதிகரித்தது என்பதை நான் அறியேன்.
ஆனால் இதில் பாரிய முறைகேடு நடைபெற்றுள்ளதை மட்டும் தெளிவாக அறிவேன்.
ஏராளமான எதிர்பார்ப்புகளுடன் பொதுமக்கள் உங்களை ஆட்சிக்குக் கொண்டுவந்துள்ளனர்.
அவ்வாறான நிலையில் இவ்வாறான மோசடிகள் நடைபெறுவதைக் குறித்து எனது பலத்த அதிருப்தியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
ibctamil

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments