Ticker

6/recent/ticker-posts

Ad Code



திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-202


குறள் 1045
நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும்.

வறுமைங்கிற தும்பத்துல மட்டும் மாட்டிக்கிட்டா, வேற வகையான பல தும்பங்கள் வந்து சேர்ந்திரும். 

குறள் 1049
நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பாடு அரிது.

ஒருத்தனால தீக்குள்ள வேணாலும் படுத்து நல்லா தூங்க முடியும். ஆனா அவனுக்கு வறுமை வந்து அது படுத்துத பாட்டுல அவனுக்கு சரியா தூக்கமே வராது. 

குறள் 1051
இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்
அவர்பழி தம்பழி அன்று.

எல்லாருக்கும் கொடுத்து ஒதவ வசதி இருக்க ஒருத்தங்கிட்ட போய் யாசகம் கேட்கும் போது, அந்தப் பெரிய மனுசன் வச்சுக்கிட்டே இல்லைன்னு சென்னாமுன்னா, அது அவனுக்கு வரக்கூடிய பழி தான். கேட்டவனுக்கு ஒரு பழியும் வராது. 

குறள் 1052.
இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின்.

நாம ஒருத்தங்க கிட்ட எதையாவது  யாசகமா கேக்கும்போது அவங்களும் முழு மனசோடு கொடுத்து ஒதவினா, அப்படி யாசகம் கேக்கது கூட நமக்கு இன்பந்தான். 

குறள் 1053
கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று
இரப்புமோ ரேஎர் உடைத்து.

ஒளிவு மறைவு இல்லாத கடமை உணர்ச்சி இருக்க ஒருத்தர் கிட்ட போய் யாசகம் கேட்பது கூட கேக்கவனுக்கு பெருமை தான். 

(தொடரும்)

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments