
உனக்காக எல்லாம்
உனக்காக கண்ணே.
எதற்காக உன்மேலே
காதல் அதற்காக .
எள்ளுப்போல் சொல்லழகியே .
கள்ளாக போதையேற்றுகிறாயே.
உள்ளுக்குள்ளே உள்ளமும்
நில்லாமல் தள்ளாடுதே.
கனவோடு விளையாடும்
நாயகியே.
கதையோடு உறவாட வா
வெளியே.
காத்ருக்கிறது
பாயும் தலைணையும்
தனியே.
காலம் கரையும்
முன்னே வந்திடு
நீயே.
உணர்வும் உள்ளமும்
அடக்கத்தின் எல்லையிலே.
எந்தன் உணர்ச்சியும்
இதயமும் உன் இல்லத்திலே .
உரியவளே பெயரினை
கரும்போடு ஒப்பிடவா.
எத்தனை முறை உச்சரித்தாலும்
அத்தனை முறையும் தித்திக்குதே.
உந்துதல் கொடுக்கிறதே
ஓயாது ஐம்பொறிகளும் .
எப்படி உறங்கிடுவேன்
கண்களில் நீ உருளையிலே .
ஆர் எஸ் கலா

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments