
"இல்லை இல்லை அரசே இவை நம் பட்டத்து ராணி அதாவது தங்களின் அன்னையோட கட்டளை அவரின் கட்டளைப் படிதான் இங்கே அனைத்தும் நடக்கின்றது சந்தேகம் என்றால் இவர்களிடமோ? அல்லது வெளியே உள்ள காவலரிடமோ? கேளுங்கள் உங்கள் சந்தேகம் தீர்ந்து விடும். பயப்பிடாமல் அருந்துங்கள் அரசே" என்றான் குமரன்.
"ஆமாம் ராஜகுமாரி நேற்று மகாராணி கூறினார்கள் நான் தான் உங்களிடம் கூறவே மறந்து விட்டேன். மன்னிக்க" என்று தனக்குத் தெரிந்த வகையில் சமாளிச்சாள் பானு.
உடனே "ஏன்டி தோழி பானு அதை என்னிடமாவது சொல்லி இருந்தால் நேற்று கொய்யாத் தோட்டத்தில் பழம் பறிக்கும் போதே சொல்லி இருப்பேனே" என்றாள் அவள் பங்குக்கு மீனா.
"கொயாத் தோட்டமா? நான் போனதாக ஞாபகம் இல்லையே எப்போ போனோம் போவோமா? என்று தானே நேற்றுக் கேட்டேன்" என்றார் ராஜகுமாரி .அவர் இரண்டு ஆண்டுக்கு முன் பேசியதை ஏதோ நேற்றுப் பேசியதாகக் கூறினார்
ஆனால் உண்மையில் அவரைக் கூட்டிக் கொண்டு கொய்யாத் தோப்பில் கொய்யா பறித்தவைகளையே மீனா கூறினாள். ஆ கா மீனா ஏதோ சமளிப்பதாய் நினைத்துக் குட்டையைக் குளப்பி விட்டு திருட்டு முழி முழிக்க ஆரம்பித்து விட்டாள்.
உடனே பானு சமளித்துக் காப்பாற்றினாள் மீனாவை "இல்லை அரசியே அவள் என்னைக் கூறுகிறாள் நாங்கள் போனோம் கனிகள் எடுத்து வரவே அதைத்தான் சொல்லி இருக்காள் அப்படித் தானே மீனா" என்று பானு கேட்கவே "ஆமா ஆமா" என்று ஆமாப் போட்டே
நழுவி விட்டாள் மீனா.
"ஓ அப்படியா? சரி குடிக்கின்றேன் சற்று நான் என் அலங்காரத்தைக் குறைத்து விட்டு வருகிறேன்" எனக் கூறி அலங்காரப்படுத்துதல் அறை நோக்கி விரைந்தார் ராஜகுமாரி.
பானு மீனாவைப் பார்த்து "உளறு வாய் உன்னை மாட்டி விட்டுச்சா? ஏன்டி சிந்திக்கவே மாட்டாயா?" என்று பானு மீனாவிடம் கேட்க. "அது இருக்கட்டும் டி ஏன் மருத்துவரே ராஜகுமாரி பூரண குணமானது போல் தெரிகிறதே பின்னர் ஏன் மருந்து கொடுக்க வேணும் "என்று கேட்டாள் மீனா மருத்துவரைப் பார்த்து.
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments