
அமெரிக்காவுடனான இந்தோனேசியாவின் வர்த்தக உடன்பாடு குறித்து புதிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
சுமார் ஒரு வாரத்துக்கு முன்னர் அந்த உடன்பாடு குறித்து அறிவிக்கப்பட்டது.
அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களில் கிட்டதட்ட 99 விழுக்காட்டுப் பொருள்களுக்கு வரி விலக்கப்படும் என்று இந்தோனேசியா கூறியது.
அதற்குப் பதில் இந்தோனேசிய ஏற்றுமதிகளுக்கான வரியை
அமெரிக்கா 32 விழுக்காட்டிலிருந்து 19 விழுக்காட்டிற்குக் குறைக்கும்.
அமெரிக்க நிறுவனங்களுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி அது என அந்நாட்டு அதிபர் டோனல்ட் டிரம்ப் பாராட்டியிருக்கிறார்.
முக்கிய கனிமங்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதற்கும் இந்தோனேசியா ஒப்புக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
போயிங் (Boeing) விமானங்களையும் விவசாயப் பொருள்களையும் அமெரிக்காவிடமிருந்து வாங்க இந்தோனேசிய இணக்கம் தெரிவித்துள்ளது.
வரும் வாரங்களில் இருதரப்பும் உடன்பாட்டின் விவரங்களை உறுதிப்படுத்தவுள்ளன.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments