Ticker

6/recent/ticker-posts

Ad Code



வெள்ளக்காட்சியை நேரடியாக தெரிவித்த செய்தியாளரை அடித்துச் சென்றது வெள்ளம்


கொட்டும் மழையை அடுத்து ஏற்பட்டுள்ள வெள்ளக்காட்சியை நேரடியாக தெரிவித்த செய்தியாளர் ஒருவர், அந்த வெள்ள நீரில் அடித்துச் செல்லப்படும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பாகிஸ்தான்(pakistan) நாட்டில், இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடந்த சில வாரங்களாகவே பாகிஸ்தானில் கனமழை பெய்து வருகின்றது. இதனால், அங்குள்ள நீர்நிலைகள் நிரம்பி பல்வேறு இடங்களில் வெள்ளம்பாய்ந்தோடி வருகிறது.

நேரலையில் பேசிக்கொண்டிந்த செய்தியாளர்
இந்நிலையில், ராவல்பிண்டி மாவட்டத்திலுள்ள சாஹன் அணையில், கரைபுரண்டு ஓடும் வெள்ள நீரினுள் நின்றுகொண்டு, வெள்ளத்தின் நிலவரம் குறித்து நேரலையில் பேசிக்கொண்டிந்த செய்தியாளர் ஒருவர், அந்த வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த முழு சம்பவமும், காணொளியில் பதிவு செய்யப்பட்ட நிலையில், மிகவும் ஆபத்தான கழுத்து உயரமுள்ள வெள்ள நீரில் அவர் நின்றபடி மைக்கில் பேசிக்கொண்டிருப்பதும், பின்னர், வெள்ளத்தில் அவர் அடித்துச் செல்லப்படுவதும் பதிவாகியுள்ளன.

அந்த காணொளி காட்சிகளில் உள்ள செய்தியாளரின் விவரங்கள் குறித்து, இதுவரை தெளிவான செய்திகள் எதுவும் கிடைக்கவில்லை. இருப்பினும், அந்நபர் உள்ளூரைச் சேர்ந்த டிக்டொக் பிரபலம் என்று இணையத்தில் சிலர் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டுள்ளனர்.

ibctamil

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments