
2025ம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் உலக மக்கள் தொகை சுமார் 809 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவில் 144.17 கோடிப் பேர்களும், சீனாவில் 142.51 கோடிப் பேர்களும் வாழ்கின்றனர்.
உலகில் ஒவ்வொரு நாடுகளிலும் உணவுப் பற்றாக்குறை, நிலப்பற்றாக்குறை. வளப்பற்றாக்குறை உள்ளிட்டவைகள் காணப்படுகின்றன. மக்கள் தொகை பெருக உணவு, குடிநீர், வசிப்பிடம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை உலகம் எதிர்கொள்ள நேரிடுகின்றது.
இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 1989ம் ஆண்டு தொடங்கப்பட்ட உலக மக்கள் தொகை தினம், ஆண்டுதோறும் ஜூலை 11ம் திகதி நினைவூட்டப்பட்டு வருகின்றது.
குடும்பக் கட்டுப்பாடு, பாலின சமத்துவம், பிரசவ காலத்தில் பெண்களின் ஆரோக்கியம் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இந்த உலக மக்கள் தொகை தினத்தில் ஆண்டுதோறும் வலியுறுத்தி வருகின்றனர்.
மக்கள் தங்கள் வாழ்க்கை மீது கொண்டுள்ள திருப்தி, வருவாய், சமூக ஒத்துழைப்பு, வாழ்நாள், சுதந்திரம், ஊழலின்மை, தாராள மனப்பான்மை ஆகியனவற்றை கருத்தில் கொண்டு மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் பின்லாந்து முதலிடம் வகிக்கின்றது. அடுத்த நாடுகளாக டென்மார்க், ஐஸ்லாந்து, ஸ்வீடன், நெதர்லாந்து, நார்வே, லக்ஸம்பெர்க், ஸ்விட்ர்சர்லாந்து, ஆஸ்திரேலியா கொள்ளப்படுகின்றன. யுத்தத்துக்கு முன்னர் இஸ்ரேல் இந்தப் பட்டியலுக்குள் அடங்கிப் பெற்றிருந்தாலும், இன்று அதன் நிலை கவலைக்கிடமாயுள்ளது. நாட்டை விட்டும் சைப்ரஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று தஞ்சம் புகும் நிலை ஏற்பட்டுள்ளது. மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவம், ஜெர்மனியும் மறையே 23ம், 24ம் இடங்களிலும், இந்தியா 126வது இடத்திலும் உள்ளது.
அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின்படி 112 நாடுகளில் வசிக்கும் 630 கோடி பேரில் 110 கோடி மக்கள் வறுமையின் பிடியில் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. வறுமையின் கோரப்பிடியில் சிக்கியுள்ள நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இந்தியாவும், அடுத்து பாகிஸ்தான், எத்தியோப்பியா, நைஜீரியா, கொங்கோ போன்ற நாடுகளும் உள்ளன.
அண்மை காலங்களில் நாடுகளுக்கிடையே மோதல்கள் அதிகரித்துள்ளன. இதனால் ஏராளமான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். போருக்கு பயந்து லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தும் செல்கின்றனர். இதனால் அநேக மக்களின் வாழ்க்கையும், வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளன.
போர் நடக்கும் நாடுகளில் வசிக்கும் ஏழை மக்களில் நான்கு பேரில் ஒருவர் மின்வசதியின்றியும், சிக்கல்கள் இல்லாத நாடுகளில் வசிக்கும் 20 ஏழைகளில் ஒருவர் மட்டுமே மின்வசதியின்றியும் வாழ்கின்றனர். போர் நடக்கும் நாடுகளில் குழந்தைகளின் கல்வி, சத்துணவு போன்றன பாதிக்கப்பட்டுள்ளமை கவலைதரும் விடயமாகும்!
செம்மைத்துளியான்.

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments