
தோழிகளுடன் சுற்றுலா செல்வதாகக் கூறி காதலனுடன் சென்ற மாணவி வனப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் பொத்தொட்டூரில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு இன்டர்மீடியட் படிக்கும் மாணவி வைஷ்ணவி. இவரும் அலத்துருத்தி கிராமத்தைச் சேர்ந்த லோகேஷும் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் தனது தோழிகளுடன் கண்டிக்கோட்டைக்கு சுற்றுலா செல்வதாக பெற்றோரிடம் தகவல் கூறிவிட்டு கல்லூரி விடுதியில் இருந்து வைஷ்ணவி புறப்பட்டுச் சென்றுள்ளார். அதன் பின்னர் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர் ஜம்மலமடுகு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் வைஷ்ணவியை தீவிரமாக தேடி வந்த நிலையில், கண்டிக்கோட்டை வனப்பகுதியில் மாணவி வைஷ்ணவியின் உடல் ஆடைகளின்றி சடலமாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே வைஷ்ணவி கடைசியாக காதலன் லோகேஷ் உடன் இருசக்கர வாகனத்தில் சென்றது சிசிடிவியில் பதிவாகி உள்ளது. அதன் அடிப்படையில் லோகேஷை ஜம்மலமடுகு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தோழிகளுடன் சுற்றுலா செல்வதாகக் கூறி காதலனுடன் சென்ற மாணவி வனப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments