Ticker

6/recent/ticker-posts

Ad Code



ஆகாஷ் தீப் பவுலிங் பண்ணும் போதெல்லாம் இதை மட்டும் தான் சொன்னேன்.. அவர் அசத்திட்டார் – முகமது சிராஜ் பேட்டி


எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்று முடிந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 336 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்த தொடரினை தற்போது ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. லீட்ஸ் போட்டியில் அடைந்த தோல்விக்கு பழி தீர்க்கும் விதமாக இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

அதுமட்டும் இன்றி இதுவரை போட்டி நடைபெற்ற எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் இந்திய அணி ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வெற்றி பெறாத வேளையில் முதல் முறையாக வரலாற்று சிறப்புமிக்க ஒரு வெற்றியை இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியானது நிகழ்த்தி காட்டி இருக்கிறது. அதிலும் குறிப்பாக பும்ரா இல்லாமல் கிடைத்த இந்த வெற்றி பலரது மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் மிகச்சிறப்பாக பந்துவீசி இங்கிலாந்து அணியின் 20 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அதிலும் குறிப்பாக வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் தீப் முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினார். அதேபோன்று மற்றொரு நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தியிருந்தார். இந்நிலையில் இந்த போட்டியில் ஆகாஷ் தீப் மிகச் சிறப்பாக பந்து வீசியது குறித்து பேசியுள்ள முகமது சிராஜ் கூறியதாவது : உண்மையிலேயே இந்த போட்டியில் ஆகாஷ் தீப் மிகச் சிறப்பாக பந்துவீசி வரலாறு படைத்துள்ளார்.

இந்த போட்டியில் அவர் பந்துவீசும் போதெல்லாம் நான் மிட் ஆப் திசையில் இருந்து அவருக்கு அறிவுரை வழங்கிக் கொண்டே இருந்தேன். நான் அவரிடம் கூறியதெல்லாம் ஒரே ஒரு விடயம் மட்டும்தான். விக்கெட்டுகளை எதிர்பார்த்து பந்து வீசாதே. ஒரே இடத்தில் தொடர்ந்து பந்துவீசு. நிச்சயம் உனக்கு விக்கெட்டுகள் கிடைக்கும் என்று முதல் இன்னிங்சின் போது கூறினேன்.

அந்த வகையில் முதல் இன்னிங்சில் சிறப்பாக பந்துவீசிய அவர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு இரண்டாவது இன்னிங்சிலும் 6 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தலாக செயல்பட்டார். என்னை பொறுத்தவரை காபா வெற்றி, லார்ட்ஸ் வெற்றிக்கு அடுத்து மூன்றாவது பெரிய வெற்றியாக இந்த எட்ஜ்பேஸ்டன் வெற்றியை நினைப்பதாக முகமது சிராஜ் கூறியது குறிப்பிடத்தக்கது.

crictamil

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments