Ticker

6/recent/ticker-posts

Ad Code



நடாஷா பெர்ட்ராண்டை நாய் போல தூக்கி எறிய வேண்டும்; கடும் கோபத்தில் டிரம்ப்!


நடாஷா பெர்ட்ராண்டை CNN-ல இருந்து நீக்கி "நாய் மாதிரி" தூக்கி எறிய வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளமை பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் - இஸ்ரேல் இடையே போர் தொடங்கி நடந்து வரும் நிலையில், ஈரான் தொடர்ந்து தனது பாலிஸ்டிக் உள்ளிட்ட சக்திவாய்ந்த ஏவுகணைகளை இஸ்ரேல் மீது வீசி தாக்கி வருகிறது.

இந்நிலையில் ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்கவோ பயன்படுத்தவோ கூடாது என கூறி வந்த அமெரிக்கா, தனது வான் படையை ஏவி ஈரானின் போர்டோவில் உள்ள நிலத்தடி அணுசக்தி நிலையம் உள்ளிட்ட 3 முக்கிய அணுசக்தி தளங்களை தாக்கி அழித்ததாக செய்திகள் வெளியானது.

ஆனால் இந்த 3 அணுசக்தி தளங்களும் முற்றிலுமாக அழிக்கப்படவில்லை என்றும், அவற்றை சரிசெய்ய ஈரானுக்கு சில மாதங்களே ஆகும் என்றும் அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளதாக சிஎன்என், நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட ஊடகங்கள் செய்தி வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் , அமெரிக்காவின் பிரபலமான சிஎன்என், நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கைகளை கடுமையாக சாடியதுடன், மக்கள் பொய் செய்தி பரப்பும் இத்தகைய மீடியாக்களை வெறுப்பதாகவும் கூறியிருந்தார்.

அதோடு “நடாஷா பெர்ட்ராண்டை CNN இல் இருந்து நீக்குவதுடன் "நாய் மாதிரி" தூக்கி எறிய வேண்டும் எனவும் , நிருபரா இருக்கறதுக்கு அவருக்கு எந்த தகுதியும் இல்லை என்றும் தனது சமூகவலைத்தளத்தில் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.

canadamirror

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments