
கண்டி ஏரிக்கரைச் சுற்றில் இடம்பெற்ற சங்கிலி பறிப்பு சம்பவம் தொடர்பில், இராணுவ அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த அதிகாரி, கண்டி ஏரிக்கரையில் சென்ற பெண்ணொருவரின் தங்க சங்கிலியை பறித்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
சம்பவத்துடன் தொடர்புடைய சிசிரிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர், சந்தேக நபர் தலதுஒயா பகுதியைச் சேர்ந்தவரென அடையாளம் கண்டுள்ளனர்.
அதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர் சுமார் 20 வருடங்களாக இராணுவத்தில் பணியாற்றி வருவதும், தற்போது வெலிஓயா இராணுவ முகாமில் கடமையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.
அதன்படி, சந்தேக நபரை கண்டி நகருக்கு வரவழைத்து காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில், விசாரணையின் போது, அவர் விடுமுறை பெற்று சங்கிலி பறிப்பில் ஈடுபட்டுள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
அத்தோடு, சம்பவத்தில் பறிக்கப்பட்ட தங்க சங்கிலியுடன் இதற்கு முன்னர் கண்டி மற்றும் கலஹா பகுதிகளில் அடகு வைக்கப்பட்டிருந்த, ரூ. 500,000 மதிப்புள்ள இன்னொரு தங்க சங்கிலியையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
மேலும், குறித்த இராணுவ அதிகாரி ஏற்கனவே பல சங்கிலி பறிப்புகளில் ஈடுபட்டுள்ளார் என்றும், அவை மூலமாகக் கிடைத்த பணத்தை ஒரு பிரமிட் (தடிப்பு) வணிகத் திட்டத்தில் முதலீடு செய்துள்ளார் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், அவரை காவல்துறையினர் கண்டி நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்திய பின்னர் விளக்கமறியலில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், இன்றைய தினம் அடையாளம் காணும் அணிவகுப்புக்காக(identification parade) அவரை மீண்டும் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லவுள்ளனர்.
ibctamil

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments