Ticker

6/recent/ticker-posts

"உயரமாக வளரப் பால் குடித்தேன், ஆனால் தாடை மட்டுமே வளர்ந்தது"


ஜப்பானில் தாடை பெரிதாக இருப்பதால் ஓர் ஆடவர் பிரபலமடைந்துள்ளார்; உருவக் கேலிக்கும் ஆளாகியுள்ளார்.

ஜோனுச்சி (Jonouchi) என்று அறியப்படும் அவருக்கு YouTube தளத்தில் சுமார் 350,000 ரசிகர்கள் உள்ளதாக South China Morning Post செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

உலகில் ஆக நீளமான தாடையுள்ள YouTube பிரபலம் என அவர் தம்மைச் சொல்லிக்கொள்கிறார்.

தம் தாடை நீளமாகவும் கூர்மையாகவும் வளர்ந்து வருவதை 5 வயதிலிருந்தே கவனித்ததாக ஜோனுச்சி South China Morning Post செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

தம் குடும்பத்தினர் எவருக்கும் அதுபோன்ற நீளமான தாடை இல்லை என்றும் சொன்னார்.

"உயரமாக வளரப் பால் குடித்தேன்; ஆனால் தாடை மட்டுமே வளர்ந்தது" என்கிறார் வேடிக்கையாக.

வழக்கத்துக்கு மாறான நீண்ட தாடைக்குக் காரணமறிய முடியாமல் அவரைச் சோதித்த பல் மருத்துவர்களும் திகைத்துப் போயினர்.

பள்ளிப் பருவத்திலிருந்து உருவக் கேலிக்கு ஆளானபோதும் சமூக ஊடகத்தில் புகழைத் தேடி தந்தது நீளமான தாடைதான் என்கிறார் ஜோனுச்சி உற்சாகமாக.

seithi

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments