
Nvidia H20 சிப்ஸ் ஆர்டர்களை குறைக்க சீனா அழுத்தம் கொடுத்துள்ளது. உள்ளூர் தயாரிப்பாளர்களுக்கு ஆதரவு, அமெரிக்காவுடன் நடக்கும் வர்த்தக சண்டை இதற்கு காரணம்.
அமெரிக்காவின் AI சிப்ஸுக்கு NO?:
சீனா, Alibaba, ByteDance போன்ற பெரிய டெக் நிறுவனங்களுக்கு, அமெரிக்காவின் Nvidia நிறுவனத்தின் H20 AI சிப்ஸ் ஆர்டர்களை குறைக்க அழுத்தம் கொடுத்து வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்த சிப்ஸ்களை “பழையவை” என்று கூறியுள்ளார்.
சீன அரசின் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MIIT), “உள்ளூர் தயாரிப்புகளை விட்டுவிட்டு ஏன் Nvidia சிப்ஸ் வாங்குகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளது. இதன் காரணமாக, சில நிறுவனங்கள் தங்கள் ஆர்டர்களை குறைத்துள்ளன. குறிப்பாக, அரசு தொடர்பான திட்டங்களில் இந்த சிப்ஸ்களை தவிர்க்குமாறு சீனா அறிவுறுத்தியுள்ளது.
பின்னணி:
அமெரிக்கா, முன்னர் H20 சிப்ஸ் விற்பனைக்கு தடை விதித்திருந்தாலும், சமீபத்தில் ட்ரம்ப் 20% வருவாய் பங்கு உடன்பாட்டின் கீழ் சீனாவில் விற்க அனுமதி அளித்தார். ஆனால் தற்போது, சீனா தனது உள்ளூர் சிப் தயாரிப்பாளர்களான ஹுவாவே மற்றும் காம்பிரிகான் போன்ற நிறுவனங்களை ஆதரிக்க முயற்சி செய்து வருகிறது.
zeenews

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments