Ticker

6/recent/ticker-posts

Ad Code



மருந்து பற்றாக்குறையை தவிர்க்க உடனடி நடவடிக்கை


மருந்துகளின் கொள்முதல் மற்றும் விநியோகம் குறித்த பொறிமுறையை சரிப்படுத்தி, பற்றாக்குறை மற்றும் தாமதங்களின்றி மக்களுக்கு மருந்துகளைத் தொடர்ச்சியாக வழங்குவதை உறுதி செய்யுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு வலியுறுத்தியுள்ளார். 
 
மருந்து விநியோக செயன்முறையை முறைப்படுத்துவது தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி மற்றும் சுகாதார அமைச்சின் அதிகாரிகளிடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை வலியுறுத்தியுள்ளார். 

மருந்து கொள்முதல் செயல்முறை மற்றும் விநியோக பொறிமுறையில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமைகள் மற்றும் பலவீனங்கள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. 
 
அத்துடன், சில மருத்துவமனைகளில் மருந்து பற்றாக்குறை ஏற்படுவதைத் தவிர்க்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதுடன், நாட்டில் மீண்டும் இதுபோன்றதொரு நிலைமை ஏற்படாதிருக்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 
 
இதற்குத் தேவையான நீண்டகால திட்டங்களை உடனடியாக தயாரிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். 
 
அத்துடன், மருத்துவமனைகளுக்கு மருந்துகளைப் பெற்றுக்கொள்ளத் தேவையான நிதி ஏற்கனவே திறைசேரியில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதன்போது தெரிவித்துள்ளார்.

tamilmirror

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments