Ticker

6/recent/ticker-posts

Ad Code



எதிர்காலம் – செயற்கை நுண்ணறிவின் கையில்?


உலகம் எப்போதும் முன்னேறிக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அந்த முன்னேற்றத்தின் பாதையை இன்று ஒரு முக்கியமான சக்தி வழிநடத்திக் கொண்டு இருக்கிறது – அது தான் **செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI).

AI – ஒரு மனிதப் பாவனையின் முடிவா? அல்லது ஒரு புதுமை புரட்சியா?

2025-ம் ஆண்டிலிருந்து உலகம் முழுவதும் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு AI வரலாற்றுப் புதிய துவக்கம் ஏற்பட்டுவிட்டது. நம் கைபேசி, மருத்துவம், வங்கி, ஊடகம், தொழில், பாதுகாப்பு, கல்வி… எதிலும் AI இன்றியமையாத ஒன்றாக மாறியுள்ளது.

இந்த நிலையில், மக்கள் மனதில் ஒரு பெரிய கேள்வி:

எதிர்காலம் முழுவதும் AI-யின் கையில் செல்லுமா?

2025 முதல் 2060 வரை – மாற்றத்தின் பாதை

நிபுணர்கள் கூறுவது போல, 2060 ஆண்டுக்குள் பல்வேறு துறைகள் முழுவதும் **AI நிர்வாகம் மற்றும் கட்டுப்பாடு** அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சிலர் அதைக் கவலையோடு பார்க்கிறார்கள்:

மனிதர்கள் தேவையற்றவர்களாக மாறிவிடுவார்களோ?
AI மனிதர்களை கட்டுப்படுத்துமா?
உணர்வில்லாத யந்திரங்கள் எதையும் தீர்மானிக்கலாமா?

இந்த கேள்விகள் மிக இயல்பு. ஆனால் அதற்குள் பதிலும் இருக்கிறது.

AI-க்கு உள்ளே உணர்வு இல்லை. ஆனால் கட்டுப்பாடு மனிதரிடம் இருக்க வேண்டும்.

AI ஒரு கருவி – அது நமக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்டது.
இது மனித நற்பண்புகளின் பிரதிபலிப்பாக இருக்க வேண்டும்.
நாம் அதை நியாயமும், மனவுறுதியும், ஒழுக்கமும் கொண்டு நிர்வகிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

AI யானது:

 தீவிர சோதனைகளை செய்யும் மருத்துவர் ஆகலாம்.
பசுமை பயிர் வளர்க்கும் விவசாய உதவியாளராக இருக்கலாம்.
வறுமையை குறைக்கும் திட்டங்களை கணக்கிடும் ஆலோசகராக இருக்கலாம்.

ஆனால், இந்த அனைத்தும் மனிதநேயம் மற்றும் இஸ்லாமிய ஒழுக்கம்  இல்லாமல் நடந்தால் அது ஆபத்தானது.

நம்பிக்கை – மனிதரின் இதயத்தில் இருக்கிறது, AI யின் மெமரியில் இல்லை.

எதிர்காலம் AI யின் கையில் இருக்கலாம்.

ஆனால் தீர்மானம், கருணை, ஈமான், சத்தியம், நேசம் – இவை மனிதர்களின் கையில்தான் இருக்கும்.

எதிர்காலத்தில் AI வல்லமையானது தான்.

ஆனால் அது நம்மை நிர்வகிக்காமல்,நாம் அதை நிர்வகிக்கவும், வழிகாட்டவும் தயாராக இருக்க வேண்டும்.

AI ஒரு கருவி.
அதை மனிதம் கொண்டு நிர்வகிக்காதால், அது மனிதத்தையே மாற்றிவிடும்.

அதை ஜன்னத் நோக்கி வழிசெய்யவேண்டும் ஜாஹில்லியாவின் வழி அல்ல.

உரிமை யார் கையில் இருக்கிறது?

AI கையிலா?

அல்லாhவின் கட்டுப்பாட்டிலா?

நம்மிடம் ஈமான் இருக்கிற வரை, பதில் தெளிவாக இருக்கிறது.

AI ஜூலைனா பானு

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments