Ticker

6/recent/ticker-posts

Ad Code



பாதுகாப்பு யுக்தி!


நான் ஒரு மரத்தடியில்  அமர்ந்திருந்தேன். திடீரென  சிட்டுக்குருவி ஒன்றின் அலறல் சத்தம் எனது கவனத்தை ஈர்த்தது.

அது ஏதோ ஒரு சிக்கலில் சிக்கிக்கொண்டுள்ளது என்பது மாத்திரம் எனக்குத் தெளிவாக தெரிந்தது.

இரண்டு சிட்டுக்குருவிகள்  சத்தமிட்டவாறு மரக்கிளையை வட்டமிட்டுக் கொண்டிருந்தன.

நான் நெருங்கிச் சென்று பார்த்தேன். அதன் பிரச்சினைக்கான காரணம்  புரிந்தது.

ஒரு  பாம்பு அதன் குஞ்சுகள் இருக்கும் கூட்டை நோக்கி ஊர்ந்து வந்து கொண்டிருந்தது.

ஆண் பறவை பதட்டத்தோடு ஏதோ ஒன்றை தேடுவது போல் தெரிந்தது. சில நொடிகள் கழித்து அது ஒரு சிறிய கிளையை எடுத்து வந்து கூட்டை மூடி மறைத்தது. இலைகுலைகளால் மறைப்பது ஒரு பாதுகாப்பாகுமா? இது முட்டாள்தனமான பாதுகாப்பு நடவடிக்கை அல்லவா? என  எனக்குள் நான் கேட்டுக்கொண்டேன்.

குருவிகள்  இரண்டும் சேர்ந்து அருகிலிருந்த கிளையில் நின்றவாறு நடக்கப்போவதை அவதானித்தன; நானும் நடப்பதை கூர்ந்து  அவதானிக்கலானேன்.

பாம்பு மெல்ல ஊர்ந்து வந்து  கூட்டை நெருங்கியது. குஞ்சுகளின் கதை முடிந்துவிட்டது என்றுதான் நான் நினைத்தேன்.

மூடப்பட்டிருந்த அந்த இலைகுலைகளுக்கு மத்தியில் பாம்பு தன் தலையை நுழைக்க முற்பட்டபோது, மின்சாரம் தக்கியதுபோன்று,  பதறியபடி பாம்பு பின்வாங்கிக் கூட்டை விட்டும் வேகமாக ஊர்ந்து செல்லலானது.

என்ன நடந்தது என்று எனக்குப் புரியவில்லை.

குருவிகள் இரண்டும் தங்கள் குஞ்சுகளை காப்பாற்றிய குதூகலத்தில் இருந்ததை மட்டும்தான் நான் அவதானித்தேன்.

கூட்டுக்கு மேலே இருந்த அந்த கிளையை தந்தைக் குருவி அகற்றி, கீழே வீசியது.

அந்தக் கிளையை  எடுத்துக்கொண்டு  தாவரவியலாளர் ஒருவரைச் சந்தித்து விபரம் கேட்டேன்.

அதை பரிசோதித்த அவர், இந்த இலைகளின்  வாசனையில் பாம்புகளைக் கொல்லும் நச்சுத் தன்மை இருப்பதாகவும், அதன் அருகில்  பாம்புகள் நெருங்குவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

பாம்புகள் அஞ்சும் கொடிய விஷம் இந்த இலைகளில் உள்ளது என்று சிட்டுக்குருவிக்கு கற்றுக்கொடுத்தது யார்?

மண்ணிலும் விண்ணிலும் காட்டிலும் நாட்டிலும் நேர்த்தியான ஒரு நிர்வாகம் நிபுணத்துவமிக்க ஒருவனால் நிர்வாகிக்கப்படுகிறது.

காட்டிலுள்ள பறவைகளுக்கு, பாதுகாப்பு யுக்திகளை கற்றுக்கொடுத்த அவன் யார்? நம்மைப்  படைத்துப் பறிப்பாலிப்பவனே அவன்!  

 செம்மைத்துளியான்.

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments