
பிரிக்ஸ் (BRICS)என்பது பிரேசில், உருசியா, இந்தியா, சீனா,தென்னாப்பிரிக்கா, தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகள் சேர்த்து 2010ல் உருவாக்கிய ஐந்து வளரும் நாடுகளின் சர்வதேசக் கூட்டமைப்பாகும்.
இவ்வமைப்பில் எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகியன கடந்த வருடம் இணைந்து கொண்டன, இவ்வருடம் இந்தோனேசியா இணைந்துள்ளதுடன் 11 நாடுகள் 'பிரிக்ஸ்' இல் உறுப்புரிமை வகிக்கின்றன. இவை வளர்ந்துவரும் நாடுகள் அல்லது புதிதாக தொழில்மயமாகி வருகிற நாடுகளாகும்.

G7, G20 மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு வெளியே உள்ள சர்வதேச நிறுவனங்களின் வளர்ச்சியில் செல்வாக்கு செலுத்துவதில் இந்தக் கூட்டமைப்பு தன் விரிவாக்கத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தும்.
17வது பிரிக்ஸ் அமைப்பு உச்சி மாநாடு பிரேசிலின் ரியோ டி ஜெனி ரோவில் நடைபெற்றது.
பிரிக்ஸ் அமைப்பை அமெரிக்க கொள்கைக்கு எதிரானது என விமர்சித்த டொனால்டு டிரம்ப், பிரிக்ஸின் அமெரிக்க எதிர்ப்பு கொள்கைகளுடன் தங்களை இணைத்துக் கொள்ளும் எந்த நாடும், கூடுதல் வரி விதிப்பை எதிர்கொள்ளும் என மிரட்டல் விடுத்துள்ளார்.
12 நாடுகளுக்கு புதிய வரியை விதித்து எழுதப்பட்ட கடிதங்களில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். இந்த வரி விதிப்பை ஏற்றுக் கொள்வது என்றால் ஏற்றுக் கொள்ளுங்கள், இல்லையேல் கைவிடுங்கள் என்றும் தடாலடியாக அவர் கூறியுள்ளார்.
ஏப்ரல் 9, புதன்கிழமை முதல் சீனப் பொருட்களுக்கு 100 சதவிகிதத்துக்கும் அதிகமான இறக்குமதி வரி விதிப்பை அமெரிக்கா அமுலாக்கிய நிலையில், சீனா 84 சதவிகித வரி விதிப்பால் பதிலடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்கள் அனைத்துக்கும் இந்த 84 சதவிகிதம் வரி அமலாகும் என சீனா அறிவித்துள்ளது.
பிரிக்ஸ் நாடுகள் தங்கள் வர்த்தக ஒப்பந்தங்களில் டாலருக்குப் பதிலாக புதிய நாணயத்தை விரைவில் வெளியிடப்போவதாகக் கூறிவருகின்றன.
செம்மைத்துளியான்.

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments