
பாடல் - 1.
புண்ணியம்ஆம் பாவம்போல் போனநாள் செய்தஅவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள் -எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை; எச்சமயத்தோர் சொல்லும்
தீதொழிய நன்மை செயல்.
விளக்கம்:
மனிதன் பிறக்கும் போதும் சரி, இறக்கும் போதும் சரி, அவன் கூட வருவதும், போவதும் அவன் செய்த புண்ணியம் அல்லது பாவம் தான். இதைத் தவிர வேறு எதுவும் கூட வாராது.
தீமையை செய்யாதே உன்னால் முடிந்த நன்மையை செய் என்பதைத் தான் அனைத்து சமயங்களும் கூறுகின்றன.
பாடல் - 2.
சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் – மேதினியில்
இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார்
பட்டாங்கில் உள்ள படி.
விளக்கம்:
உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், இந்த உலகத்தில் பிறந்துள்ள மனிதர்களில் இரண்டு வகை சாதியினர் தான் உண்டு. அடுத்தவருக்கு கொடுத்து உதவும் நல்ல குணம் படைத்த மேலோர் ஒரு சாதி. தன்னிடம் உள்ளவற்றை அடுத்தவருக்கு கொடுத்து உதவாத கீழோர் இன்னொரு சாதி. இதை நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும்.
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments