
குறள் 1069
இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள
உள்ளதூஉம் இன்றிக் கெடும்.
அடுத்தவங்க கிட்ட போய் கையேந்தி நிக்கக் கூடிய நெலைமை ஒருத்தனுக்கு வந்தா அதைப் பார்த்து நம்ம மனசு உருகும். இந்த நெலைமையில கையில வச்சுக்கிட்டே இல்லைன்னு சொல்லுத ஆளுங்களைப் பார்க்கும் போது நம்ம மனசு உருகாம அப்படியே அழிஞ்சு போவும்.
குறள் 1072
நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத்து அவலம் இலர்.
எப்பமும் நல்லது எது கெட்டது எதுன்னு யோசிச்சுகிட்டே இருக்கவங்களை விட, எதைப்பத்தியும் கவலைப்படாம இருக்க கயவர்கள் ஒரு வகையில கொடுத்து வச்ச ஆளுங்க தான்.
குறள் 1073
தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்.
இந்த கயவர்கள் ஒரு வகையில் தேவாதி தேவர்கள் மாதிரிதான். எப்படின்னா அவங்க ரெண்டுபேரும் அவங்கவங்க நெனைச்சபடியே தான் வாழ்றாங்க.
(முற்றும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments