Ticker

6/recent/ticker-posts

Ad Code



பத்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் வேட்டை மின் இதழுக்கு வாழ்த்து மடல்!:முனைவர் மு.க.அன்வர் பாட்சா(27/8/25)

எல்லாப் புகழும் இறைவனுக்கே!!

கல்ஹின்னையில் சூழ் கொண்டு, 
மலேஷியாவில் நிலை கொண்டு,
வையமெல்லாம் மணம் பரப்பி 
வாகை சூடி, புகழுடன் பவனி வரும் 
வேட்டை மின் இதழ், 
இன்று பத்தாம் ஆண்டில் 
அடியெடுத்து வைக்கிறது.

திரைப்படங்களின் கவர்ச்சியினுக்குத் 
திரையிட்டு,
தொழில்நுட்ப வளர்ச்சியின் 
கட்டமைப்புதனைக் கையிலெடுத்து,
வளமான தன் ஊடக அறப்பணியால் 
வையமெல்லாம் உலா வரும் 
வேட்டை மின் இதழை மனம் 
நிறைந்து வாழ்த்துவதில் 
பெருமிதம் கொள்கின்றேன்.

இணையில்லா இறையச்சத்துடன் 
சீரான ஊடகப் பணி
ஆற்றும் வேட்டை மின் இதழின் 
பத்தாம் ஆண்டு செம்பணிக்கும், 
அதன் நிறுவனர் அவர்களுக்கும் 
மனமார்ந்த வாழ்த்துக்கள் 
உரித்தாக்குகிறேன்.

பல்துறைச் சான்றோர்களின் 
பன்முக  அறிவினைக் கதைகளாக,
கவிதைகளாக,
கட்டுரைகளாக,
தகவல்களாக,
செய்திகளாக நாளும் அள்ளித் தரும் 
வேட்டை மின் இதழின் 
அரும்பணி மேன்மேலும் 
பல்லாண்டு தொடர... 
எல்லாம் வல்ல இறைவன் 
அருள் புரிவானாக!!

நாமும் வேட்டை மின் இதழுக்குத் தொடர்ந்து நல்லாதரவினை நல்கி, வாசித்து மகிழ்வோமாக!! என்று கூறி நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் சொல்லி மகிழ்வது உங்கள்,

தமிழக அரசின் திருவள்ளுவர் விருதாளர், 
தமிழ்ச் செம்மல், குறள்யோகி, 
முனைவர் மு.க.அன்வர் பாட்சா.
கோயம்புத்தூர்,
தமிழ்நாடு, இந்தியா.

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

1 Comments

  1. Mashallah... Super 👍
    பத்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் உலகளாவிய லட்சக்கணக்கான மக்களின் இதயங்களை
    வேட்டையாடும் வேட்டை மின் இதழுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் சொல்லி மகிழ்வது உங்கள் அன்பு திருக்குறள் தூதர் தமிழ்ச் செம்மல் முனைவர் அன்வர் பாட்சா வாழ்த்துக்களுடன் 🙏🌹🤝

    ReplyDelete