Ticker

6/recent/ticker-posts

பாகிஸ்தானில் கடும் வெள்ளம்: 321 பேர் மாண்டனர்


கடந்த 48 மணி நேரமாக பாகிஸ்தானில் கடும் மழை பெய்து வருகிறது.

பாகிஸ்தான் மக்கள் மிகமோசமான வெள்ளத்தால் அவதிப்பட்டு வருகிறார்கள். 

இந்த திடீர் வெள்ளத்தால் கடந்த 48 மணிநேரத்தில் மட்டும் 321 பேர் மாண்டனர். அவர்களில் 15 பேர் பெண்கள், 13 பேர் சிறுவர்கள்.

மாண்டவர்களில் பெரும்பாலானோர் மலைப்பகுதியைச் சேர்ந்தவர்கள்.

குறந்தது 23 பேர் காயமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

சிலர் இடிபாடுகளில் மாட்டிக்கொண்டனர்.

2000 மீட்புப் பணியாளர்கள் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக வட்டார மீட்பு அமைப்பு ஒன்று கூறி உள்ளது.

தொடர் மழை, சாலைகளில் ஏற்பட்டுள்ள சேதம் ஆகியவற்றால் மீட்புப்பணி தடைபடுவதாகச் சொல்லப்படுகிறது.

பாகிஸ்தானில் பருவமழையால் திடீர் வெள்ளமும் நிலச்சரிவும் ஏற்படுவது வழக்கம்.

ஆனால் இந்த ஆண்டு பருவமழை முன்னதாகவே பெய்யத் தொடங்கியதாகவும் அதன் தீவிரம் அதிகமாக உள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட சில மலைப்பகுதிகளைப் பேரிடர் பகுதிகளாக அரசாங்கம் அறிவித்தது.

nambikkai

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments