
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி கடந்த 2013-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 64 டெஸ்ட் போட்டிகள், 108 ஒருநாள் போட்டிகள் மற்றும் 25 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
மூன்று வகையான இந்திய அணியிலும் விளையாடியுள்ள அவர் ஐபிஎல் தொடரிலும் 2013-ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 120 போட்டிகளில் விளையாடியுள்ளார். முகமது ஷமி மீது முன்னாள் மனைவி குற்றச்சாட்டு : 34 வயதான முகமது ஷமி கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் ஹசின் ஜஹான் என்பவரை திருமணம் செய்து அவரின் மூலம் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவருமே பரஸ்பர விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
அவ்வப்போது முகமது ஷமி அவரது மகளை சந்தித்து அவருடன் புகைப்படங்களை எடுத்து அதனை தனது சமூகவலைதளம் மூலம் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் தனது சொந்த மகளுக்கு செலவு செய்வதை விட அவரது தோழிகளின் குடும்பத்திற்கு முகமது ஷமி அதிகளவில் பணத்தை செலவிடுகிறார் என முன்னாள் மனைவி ஹசின் ஜஹான் ஒரு குற்றச்சாட்டினை முன் வைத்துள்ளார். இதுகுறித்து அவர் (ஹசின் ஜஹான்) பகிர்ந்துள்ள கருத்தில் குறிப்பிடப்பட்டதாவது : எனது மகளுக்கு கடவுளின் புண்ணியத்தில் நல்ல பள்ளியில் இடம் கிடைத்துவிட்டது. எனது எதிரிகள் எல்லாம் எனது பிள்ளை நல்ல பள்ளியில் படிக்கக்கூடாது என்று நினைத்தார்கள். ஆனால் தற்போது அவள் ஒரு நல்ல சர்வதேச பள்ளியில் படித்து வருகிறார். எனது மகளுடைய தந்தை ஒரு கோடீஸ்வரர்.
ஆனால் எனது மகளின் படிப்புக்கு அவர் செலவிடுவதை காட்டிலும் அவருடைய தோழிகளுக்கு லட்ச லட்சமாக செலவு செய்கிறார். குறிப்பாக விமானங்களில் பிசினஸ் கிளாஸ் டிக்கெட் எடுப்பது மட்டுமின்றி அவர்களது குடும்பத்திற்கே பெரியளவில் பணத்தை செலவு செய்கிறார் என்ற குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
ஏற்கனவே விவாகரத்து பெரும்போது கொல்கத்தா உயர்நீதிமன்றம் முகமது ஷமியின் குழந்தைக்கு மாத மாதம் 2.5 லட்ச ரூபாய், மனைவி ஹசின் ஜஹானுக்கு 1.5 லட்ச ரூபாய் என 4 லட்ச ரூபாய் மாத மாதம் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்திருந்த வேளையில் அவர் மாதம் 4 லட்ச ரூபாய் ஹசின் ஜஹானுக்கு வழங்கி வருகிறார். ஆனால் 10 லட்சம் ஜீவானம்சம் கேட்ட எனக்கு அதில் குறைந்த தொகையே தற்போது கிடைத்து வருவதாகவும் அவரது முன்னாள் மனைவி கூறியது குறிப்பிடத்தக்கது.
crictamil

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments