Ticker

6/recent/ticker-posts

Ad Code



ராஜகுமாரியின் சுயம்வரம்-89


"ஓகோ அட நாம் அதை நினைக்க வில்லையே" என்றாள் மீனா.
அதற்குப் பானு கூறினாள் "அந்தளவுக்கு நம்மில் அறிவு மரம் பூக்கவில்லையே டி தோழி" என்று.

 அதைக் கேட்டதும் இருவரும் சிரித்தார்கள்.

குமரன் அங்கு இருந்து புறப்பட்டான். மீனா பானு இருவரும் தங்களை அலங்காரப்படுத்துதல் வேளையில் இறங்கிக் கொண்டனர்.

ராஜகுமாரியோடு சபைக்குள் நுழைய வேண்டும் அல்லவா .அதனாலே ஒரு பெருமிதம் தனக்குள்ளே அப்போது தான் தலை தூக்கியது. என்றும் இல்லாமல் இன்று குமரன் மனதிலே தன்னைத் தானே புகழ்ந்து கொண்டே தன்னோட தங்கும் இடம் நுழைந்தான். அப்போது அனைத்து மருத்துவர்களும் குமரனைப் பார்த்தனர். அவர்கள் பார்வை வேறு சிந்தனையோடு இருந்தது .அதாவது தோல்வியோடு இன்று மருந்துவர் குமரகுரு புறப்பட்டு விடுவார் என்னும் எண்ணமே அது.

அவனும் எதுகும் பேசாமல் மௌனம் சாதித்த வாறே தன் உடமைகளைத் தயார் படுத்தி முன் வாசலில் கொண்டு வைத்தான். அதைப் பார்த்த மூத்த மருத்துவர் மூர்க்க குணத்துக்கு உரியவர் குமரனைப் பார்த்து "என்ன? பெரும் மருத்துவப் பெருமானே தாங்கள் தயாராகி விட்டீர்கள் போல் தெரிகிறதே. அப்போ அவ்வளவுதானா வாய்ச்சவடால்" என்று கூறிச் சிரித்தார்.

 அதைக் கேட்டு அருகே வந்த சந்திரன் மருத்துவர் "ஏன்? ஐயா இன்றும் நீங்க அவரோடு வம்பு இழுப்பது அவரை நாம் சந்தோசமாகவே வழி அனுப்புவது தானே முறையும் கடமையும்,அதைச் செய்வோமே இன்றாவது வயதுக்கு ஏற்றால்ப் போல் பேசுங்க. இருங்க ஐயா "என்றான் 

"ஓகோ வேலிக்கு ஓணான் துணையாக வருகிறதோ நல்லது" என மூத்தவர் கேலியிட்டார் சந்திரன் கடுப்போடு தன் தலையை மறு பக்க வாட்டில் திருப்பிக் கொண்டான்.

குமரன் தன்னடக்கத்தோடு கூறினான்"நான் என் வீட்டுப் பயணம் பற்றி நம் மந்திரியிடம் அறிவித்து விட்டு வருகிறேன். அப்போதுதான் மகாராணி என்னைச் சந்திக்க அனுமதிப்பார் அண்ணா" என்றான்.

 சந்திரனைப் பார்த்து சரி குமரா சென்று வாரும் என சந்திரன் கூறவே மூத்த மருத்துவர் "ஆமா ஆமா அப்போதுதான்  கண்ட புல்லையெல்லாம் மருந்தெனக் கூறி வைத்தியம் பண்ணியதுக்கு ஊதியம் கிடைத்திடும்  ம்ம்ம்  விரைந்து செல் என்றார் கடுப்பானான் குமரன் சும்மா விட்டு விலாசினான் மூத்த மருத்துவரைப் பார்த்து அவனின் கோபம் கண்டு அதிர்ச்சி கொண்டார் மூத்த மருத்துவர் ஏனையோர் மகிழ்ச்சி கொண்டர் இதுதான் நான் உன்னிடம் எதிர் பார்த்தேன் குமரா என்று தனது மனதுக்குள்ளே பேசிக் கொண்டான் சந்திரன்

(தொடரும்) 

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments