
பல ஆண்டுகளாக, டாக்டர் டோபோல் இதய ஆரோக்கியத்திற்கான உன்னதமான ஃபார்மூலாவை பின்பற்றி வருகிறார். அது என்னவென்றால், வீரியமான நடைபயிற்சி, அவ்வப்போது நீச்சல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல்.
வயதாவதை தடுக்கும் கிரீம்கள் மற்றும் நீண்ட ஆயுளுக்கான தந்திரங்கள் போன்றவற்றை நுகரும் இந்தக் காலகட்டத்தில், 70 வயதாகும் இருதயநோய் நிபுணர் ஒருவர், முதுமையை அணுகும் முறையை மாற்ற அமைதியாக உழைத்து வருகிறார். டிஜிட்டல் சுகாதாரத்தில் முன்னோடியும் அமெரிக்காவின் முன்னணி இதயநோய் நிபுணர்களில் ஒருவருமான டாக்டர் எரிக் டோபோல் சமீபத்தில் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார். ஆனால் மருத்துவ முன்னேற்றத்திற்காக அல்ல; மாறாக அவரது நல்வாழ்வில் செய்த புரட்சிக்காக.
பல ஆண்டுகளாக, டாக்டர் டோபோல் இதய ஆரோக்கியத்திற்கான உன்னதமான ஃபார்மூலாவை பின்பற்றி வருகிறார். அது என்னவென்றால், வீரியமான நடைபயிற்சி, அவ்வப்போது நீச்சல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல்.
ஆனால் முழு உடற் தகுதியுடனும் நல்ல மன ஆரோக்கியத்துடனும் இருக்கும் வயதான நபர்கள் குறித்து படித்தபோது, புறக்கணிக்கப்படும் ஒரு ரகசியத்தைப் பற்றி அவர் அறிந்து கொண்டார். அது, தசை நிறை என்பது ஆயுட்காலத்தை விட ஆரோக்கியத்தின் கால அளவைக் கணிக்கும் ஒரு சிறந்த காரணியாகும். அறிவியல் ஆராய்ச்சி மற்றும் பொது சுகாதார சான்றுகளைத் தொடர்ந்து, டாக்டர் டோபோல் தனது வாராந்திர வழக்கத்தில் வலிமை பயிற்சிகளை சேர்த்துக்கொண்டார். பிளாங்க்ஸ், லஞ்ச்ஸ், புஷ்அப்ஸ், ரெசிஸ்டன்ஸ் பேண்ட்ஸ் மற்றும் ஸ்குவாட்ஸ் ஆகிய பயிற்சிகளை வீட்டிலேயே செய்தார்.
மாற்றங்கள் கொஞ்சம் கொஞ்சமாக தெரிய ஆரம்பித்தன. "நான் வலிமையாகவும், சமநிலையுடனும், மனரீதியாகவும் மிகவும் தெளிவாகவும் உணர ஆரம்பித்தேன். எனது தாங்கும் திறன் மேம்பட்டது. அதைவிட எனது தன்னம்பிக்கை அதிகரித்தது" என்கிறார் டாக்டர் டோபோல். வயதாவதைச் சுற்றியுள்ள மிகவும் ஆபத்தான கட்டுக்கதைகளில் ஒன்று, உடல் பலவீனம் தவிர்க்க முடியாதது. 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பலர் காயம் ஏற்பட்டுவிடுமோ என்ற பயத்தினாலோ அல்லது மாற்றத்திற்கான வயதை கடந்துவிட்டோம் என்று நம்புவதாலோ உடற்பயிற்சியை முற்றிலுமாக கைவிடுகிறார்கள்.
பல்வேறு ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளபடி, வயதானவர்களின் தசையை பராமரிப்பது மட்டுமல்லாமல் எலும்பு வலிமை, அறிவாற்றல் செயல்பாடு, இயக்கம் மற்றும் மனநிலையையும் வலிமை பயிற்சி அதிகரிக்கிறது. உண்மையில், ரெசிஸ்டன்ஸ் பயிற்சிகளுக்கு வீழ்ச்சி, எலும்பு முறிவுகள், இருதய நோய் மற்றும் மனச்சோர்வு போன்ற அபாயங்களைக் குறைவதற்கும் நெருங்கிய தொடர்புள்ளது.
இவரது பயிற்சி மிகவும் யதார்த்தமானது. சாதாரண உடற்பயிற்சி உபகரணங்கள் அல்லது அதிக எடைகளைத் தவிர்த்து, ஒரு பயிற்சியாளரின் உதவியுடன் குறைந்த தாக்கப் பயிற்சியை செய்தார். முழுமையான வலிமையை விட சமநிலை, மையத்தில் நிலைத்தன்மை மற்றும் உடலில் விழிப்புணர்வு ஆகியவற்றில் டாக்டர் டோபோல் கவனம் செலுத்துகிறார். டாக்டர் டோபோலின் கதை ஒரு தனிப்பட்ட நபரின் வெற்றி அல்ல; வயதாவதை நாம் எவ்வாறு உணர்கிறோம் என்பதை மறுவரையறை செய்வதற்கான ஒரு அறைகூவல் இது. உங்களுக்கு 30 வயதோ அல்லது 70 வயதோ, எந்த வயதிலும் இதையெல்லாம் கற்றுக்கொள்வது எளிது. ஆகவே பலவீனம் தொடங்கும் வரை காத்திருக்காமல் இன்றே உங்கள் வலிமை மேம்படுத்த தொடங்குங்கள்.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments