
ரயில் பயணத்தில்
தன் கைக்குழந்தையை
என்னவளிடம்
கையில் கொடுத்துவிட்டு
அவசரத்திற்கு
கழிவறை சென்றிருந்தாள்
எதிரில் அமர்ந்திருந்த
பெண்ணொருத்தி ...
வயிற்றில்
ஒரு புழுபூச்சி கூட இல்லையா?
சமூகம் கேட்கும் கேள்விக்கு
விடை தேடிக்கொண்டிருந்தவள்
என்னை நோக்கிய
அவளின் பார்வை ...
கவனிக்க நேர்ந்தது
விழியோரத்தில்
ஊஞ்சலாடிக்கொண்டிருந்த
ஓர் நீர்த்துளி
கைக்குழந்தையின்
கன்னத்தில் விழ ...
ஆட்காட்டிவிரலை பிடித்து
சப்பி அழுகை நிறுத்தியது
மேல் தளத்து படுக்கையில்
உறங்குபவரின்
அலைபேசி பாடல் ஒன்று
தொடர் வண்டியின்
இரைச்சலினிடையே ...
என் மனதை தாலாட்டிக்
கொண்டிடிருந்தது.
சாயிராம்.

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments