Ticker

6/recent/ticker-posts

போர் வீரர்களின் வீரம்;சி(ங்க)ராஜ் ஒரு போர் வீரன்


சில போர் வீரர்களின் வீரமும் தியாகமும் பெரும்பாலும் உலகத்துக்கு தெரியாமலே போய் விடும்.
 
அப்படி ஒரு போர் வீரன் தான் சி(ங்க)ராஜ் .

ஓயாமல் அணிக்காக உழைத்து கொண்டே இருக்கிறார்.

ஒரு பேட்ஸ்மேன் கூட இப்போது 5 டெஸ்ட் முழுமையாக ஆட முடிவது இல்லை.

ஆனால் இவர் பௌலர்!!
அதுவும் பாஸ்ட் பௌலர்!!!
 10 டெஸ்ட் தொடர்ந்து நடந்தாலும் கூட
இந்த மெஷின் நிக்காமல் ஓடிக் கொண்டே இருக்கும் போல் இருக்கிறது
பின்ன ரன் மெஷினின் வளர்ப்பு பிள்ளை பிட்னெஸில் எப்படி குறை இருக்கும்!!

கேப்டன் கில் தன்னிடம் இருந்த எல்லா ஆயுதங்களையும் பயன்படுத்தி விட்டார் தோல்வி நெருங்கி கொண்டு இருக்கிறது கவசம் உடைந்து நொறுங்கி கிடக்கிறது 

உடல் முழுவதும் குருதி பெருக்கெடுக்க தன்னிடம் இருந்த கடைசி ஆயுதத்தை எதிரியை நோக்கி வீசுகிறார் .

 எதிரியை நோக்கி சென்ற ஆயுதம் ஒன்றும் அவ்வளவு சாதாரணமானது அல்ல விமர்சனம் என்ற நெருப்பில் பல வருடங்களாக கிடந்த அக்னி அம்பு!! தன்னை நம்பியவனை ஏமாற்றாமல் எதிரியை அழித்து விட்டு தான் திரும்பி இருக்கிறது.
 
சிராஜ் விட்ட கேட்ச்!!! முடிஞ்சது மேட்ச்!!!
என்று நாம் எல்லோரும் நினைத்தோம்
ஆனால் அவர் அப்படி நினைக்க வில்லை கடைசி ரன் இருந்தாலும் கூட நான் போராடி கொண்டே தான் இருப்பேன் என்று நமக்கு தன்னம்பிக்கையை பற்றி பாடம் நடத்தி இருக்கிறார்.

சாதாரண ஆட்டோ டிரைவர் மகன் இன்று வளர்ந்து இந்திய அணியின் மாணிக் பாட்ஷாவாக மாறி நிற்கிறார்.

இது வரையில் நல்லவன் இருந்தான்!!!
இந்த கதையில ராட்ஷன் முகம் தான்!!!
வத்திக்குச்சி இல்லை எரிமலை மவனே
நெருங்காத நீ!!
குல சாமிய வேண்டிக்க மாமே
மொறைக்காத நீ 
பின் குறிப்பு- சிராஜ் ஜெயிச்சுட்டான் இந்தியா ஜெயிச்சுருச்சு என்னோட ஜின்ங்ஸ் போஸ்ட் கூட ஜெயிச்சுருச்சு ஆனால்ஜெயிக்காதுன்னு என் போஸ்ட்ல சிரிச்சவனுக எல்லாரும் அப்படியே முன்னேறாம அதே இடத்துல இன்னும் நிக்குறீங்களேடா 

நன்றி; சசிக்குமரன்
facebook

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments