
உள்ளமே உனக்குத்தான்.
உணர்வே ஏனோ
வெறுப்புத்தான்.
உணர்ச்சியில் கொஞ்சம்
கஞ்சம் தான்.
உண்மையில் நீ
என் மன்னன் தான்.
உலகையே ஆழ்வேன்
உன்னோடுதான்.
உலாவிட எண்ணுவேன்
எந்நாளும் தான்.
உப்பாக நானும்
நீராக நீயும்
இணையத்தான்.
உயிரும் வாழுது
கேளுங்கள் அத்தான்.
உரமிடும் காதலும்
நெஞ்சில் தான்
உறவாடும் கனவும்
விழியில் பூவாகத் தான்.
உந்தன் எண்ணமோ
நினைவோடு தான்.
உமது அழகோ அடைக்கலமானது
விழியோடு தான்.
ஆர் எஸ் கலா

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments