
பாட்டு ஒன்று நான் எழுதட்டுமா.
உன் பார்வையைக் கேட்டு.
பாடலிலே இணைக்கட்டுமா.
உன் காந்த விழியைக் கொண்டு.
அன்று பார்த்த பார்வையோ இன்று
மாற்றம் மாற்றம் இன்று சொன்ன
வார்த்தை அது சொர்க்கம் சொர்க்கம்
இத்தனை மாற்றம் கண்டதைக் கொண்டு
பாட்டு ஒன்று எழுதட்டுமா.
உன் பாதச்சுவடு தேடித் தேடி என்னுள்
ஏக்கம் ஏக்கம் உந்தன் முகம் பார்த்ததுமே
தோணும் வெட்கம் வெட்கம்
சொக்கி சொக்கி எனை நீ நெருங்க
சொப்பனங்கள் விழி காண அதை
சொல்லிச் சொல்லி பாட்டாக எழுதட்டுமா
உன் மார்வினிலே கண்ணீர் கோலம்
போடட்டுமா உன் மார்வுக்குள்ளே காதல்
புதையல் தேடி நுழையட்டுமா சொட்டிய
கண்ணீரையெல்லாம் எடுத்து மண மாலை
சூடட்டுமா சேகரித்த ஆசை எல்லாம் எடுத்து
வட்டியோடு முத்தம் கொடுக்கட்டுமா
நான் கொடுத்தவையும் நீ எடுத்தவையும்
நீ கொடுத்த கதையும் நான் எடுத்த கதையும்
பாட்டாக கொஞ்சம் எழுதட்டுமா
பரந்து கிடக்கும் பூமியிலே பசியோடு பறக்கும்
பருந்தைப்போல் என்னை நெருங்கி வந்த
உன் காதல் பசியை அழகாக சொல்லட்டுமா
பசிக்கு புசிக்க நான் காதல் கனியாக கனிந்த
செய்தியை இனிப்போடு சொல்லட்டுமா
மெல்ல மெல்ல நம் இதயம் இடம்மாறிய
செய்தியையும் பாடலாக எழுதட்டுமா
பாட்டு ஒன்று நான் எழுதட்டுமா
உன் பார்வையைக் கேட்டு
ஆர் .எஸ் . கலா

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments