
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கூட ரிஷப் பந்த் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா போன்ற வீரர்கள் காயமடைந்தனர். இதில் ரிஷப் பந்த் போட்டியின்போதே காயமடைந்தார். அந்தக் காயத்துடன் விளையாடவும் செய்தார்.
கிரிக்கெட் போட்டியின்போது வீரர்களுக்கு ஏற்படும் கடுமையான காயத்திற்கு பிசிசிஐ புதிய விதியை அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிரிக்கெட் போட்டியின்போது வீரர்களுக்கு ஏற்படும் கடுமையான காயம் ஏற்படுவதால் பல சிக்கல்கள் உருவாகின்றன. குறிப்பாக இந்திய அணி வீரர்கள் காயத்தால் அவதிப்படும் நிகழ்வு சமீப காலங்களில் அதிகரித்துள்ளது. இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கூட ரிஷப் பந்த் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா போன்ற வீரர்கள் காயமடைந்தனர். இதில் ரிஷப் பந்த் போட்டியின்போதே காயமடைந்தார். அந்தக் காயத்துடன் விளையாடவும் செய்தார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய டெஸ்ட் போட்டிகளின்போது உடைந்த காலுடன் ரிஷப் பந்தும், உடைந்த கையுடன் கிறிஸ் வோக்ஸும் பேட்டிங் செய்தனர். இந்த நிலையில் புதிய விதி அறிமுகப்படுத்துவதன் அவசியம் குறித்து விவாதிக்கப்பட்டது. இதற்கிடையே, கிரிக்கெட் போட்டியின்போது வீரர்களுக்கு ஏற்படும் கடுமையான காயத்திற்கு பிசிசிஐ புதிய விதியை அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, போட்டியின்போது வீரர்களுக்கு காயம் ஏற்பட்டு போட்டியை தொடர முடியாத நிலை ஏற்பட்டால் அவருக்கு பதிலாக மாற்று வீரரை களமிறக்கலாம் என்னும் வகையில் புதிய விதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் உள்ளூர் விளையாட்டுப் போட்டியில் கடுமையான காயம் மாற்று விதியை அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments