Ticker

6/recent/ticker-posts

ரணிலின் பிணை ஒத்திவைப்பு!


முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமிங்கவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், தற்போது அது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் குறித்த உத்தரவு பிறப்பக்கப்பட்டுள்ளது.

இந்த பிணை மனு கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டது. குற்றப் புலனாய்வுத் துறை சார்பாக முன்னிலையான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் இந்த சந்தேக நபருக்கு எதிராக சாட்சியங்களை முன்வைப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

விசாரணை இன்னும் முடிவடையாததால், சந்தேக நபரை காவலில் வைக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.

இதன்படி சந்தேக நபர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன, நீதிமன்றத்தில் உண்மைகளை முன்வைத்து, சந்தேக நபரை பிணையில் விடுவிக்குமாறு கோரினார்.

ibctamil

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments