
தேவையானவை
நெல்லிக்காய்.
கொடு முந்திரிப்பழம்.
இஞ்சி -கரட்கிழங்கு.
பூண்டு -சிறுவெங்காயம்.
பச்சை மிளகாய்.
திராட்சைப் பழம்.
சீனி/உப்பு/கலர் .
அரைத்த மிளகாய்.
எண்ணெய்.
வினிகர். (சுக்கு)
(இவைகள் அனைத்தும் உங்கள்தேவையின் அளவுக்கு எடுத்துக் கொள்ளலாம்)

செய்முறை
நெல்லிக்காய் அதனோடு பெரிய பல்லு பூண்டு இவை இரண்டையும் இட்டிலி தட்டில் துணி போட்டு அதன் மேல் வைத்து 30 நிமிடம் நீராவியில் விட்டு எடுத்து ஆற வைக்கவும்.
இஞ்சி சிறு வெங்காயம் பச்சை மிளகாய்இதனை உங்களின் விருப்பின் அளவு நறுக்கி உப்பு வினிகர் போட்டு 30 நிமிடம் ஊற விடவும்.
கரட் கிழங்கை சும்மா நறுக்கியே சேர்த்துக் கொள்ளலாம்.
காய்ந்த மிளகாய் அதிகமான காரம் உள்ளதாய் இருத்தல் வேண்டும் .
விதை நீக்கி சூடான தண்ணீரில் ஊற விட்டு எடுத்து அரைத்து எடுக்கவும்.
அடுப்பில் பாத்திரத்தை வைத்து நல்லெண்ணெய் சிறுதளவு விட்டு
அரைத்த மிளகாயைப் போட்டு வதக்கவும்.
மிளகாய் வாடை போனதும் ஒரு காப் நீர் விட்டு கொதிக்க விடவும்.
வேறு ஒரு பாத்திரத்தில் சீனியைப் போட்டு பாக் காச்சி எடுக்கவும் .
மிளகாயில் விட்ட நீர் வற்றியதும்.வினிகரில் ஊற வைத்த. அத்தனை பொருட்களையும் வினிகரோடு சேர்த்து கொட்டிக் கிளறவும் .
3 நிமிடத்தில் சீனிப் பாவையும் சேர்த்துக் கொள்ளவும் 5 வினாடி கொதித்ததும் மீண்டும் 1 மேசைக் கரண்டி வினிகர் விட்டு சிறுதளவு சிவப்பு வண்ணக்கலர் ஒரு துளி விட்டு அவித்த நெல்லிக்காய் ஏனைய கனிகள் அனைத்தையும் சேர்த்து கிளறி விட்டு அடுப்பை அடைத்து ஆற விடவும் ஆறியதும் காத்துப் போகாத போத்தலில் சேர்த்து அடைத்து விடவும் 1 வருடம் வைத்து பாவிக்கலாம் சாப்பிடும் போது இனிப்பாகவும் பின் நாவில் காரமும் தெரிய வேண்டும் நாட்கள் சென்ற பின்தான் சுவை அதிகம் கனிகளில் ஊறிப் பிடித்திருக்கும் காரம் உப்பு இனிப்பு எல்லாம்.

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments