Ticker

6/recent/ticker-posts

வகை வகையான கொலைகள்!


திருநெல்வேலி தூத்துக்குடின்னாலே அது கொலைகாரப்பய ஊருல்லா என்று சிலர் சொல்வார்கள். ஆனால் நிறைய ஊர்களில் நாள் தோறும் நடந்து வருகின்றன. அதனால் பல்வேறு கொலைகள் பற்றி ஒரு அலசல். 

யார் யாரைக் கொன்றாலும் கொலை செய்துவிட்டார் என்றோ படுகொலை செய்து விட்டார் என்று தான் தமிழில் சொல்லி வருகிறோம். 

தன்னையே ஒருவன் கொன்று கொண்டால் அது தற்கொலை. பிறரைக் கொன்றால் கொலை. இந்த இரண்டு மட்டும்  தான் நமக்குத் தெரியும்.

ஆனால் ஆங்கிலத்தில்… 

கொலை என்ற ஒரு பொதுச் சொல்லுக்கு Cide என்று ஆங்கிலத்தில் சொல்கிறார்கள். மனிதக் கொலைக்குண்டான சொல் Homicide.

பல்வேறு கொலைகளுக்கு தனித் தனியான சொற்கள் இருக்கின்றன.

* ஒருவன் தன்னையே கொன்று கொண்டால் அது Suicide.
* தந்தையை கொன்றால் அது Patricide.
* அம்மாவைக் கொன்றால் அது  Matricide.
* சகோதரனைக் கொன்றால் அது Fratricide.
* சகோதரியைக் கொன்றால் அது Sororicide.
* சகோதரரின் மகனையோ, சகோதரியின் மகனையோ கொன்றால் அது Nepoticide.
* ஒரு நண்பனைக் கொன்றால் அது Amicicide.
* நெருங்கிய உறவினரைக் கொன்றால் அது Parricide.
* மனைவி கணவனைக் கொன்றால் அது Mariticide.
* கணவன் மனைவியைக் கொன்றால் அது Uxoricide.
* ஒரு தந்தை தன  மகனையோ மகளையோ கொன்றால் அது Filicide.
* ஒருவன் தனது நாட்டின் மன்னனைக் கொன்றால் அது Regicide.
* ஒரு கொடுங் கோலனைக் கொன்றால் அது Tyrannicide.
* ஒருவன்  ஒரு பிஞ்சுக் குழந்தையை கொன்றால் அது Infanticide.
* ஒரு சமூகத்தையே கொல்வது classicide.
* ஒரு இனத்தையே அழிப்பது Genocide.
* ஒரு மொழியை அழிப்பது Linguicide.
* ஒரு இலக்கியத்தை அழிப்பது Litericide
* தேவனை அதாவது இறைவனை கொல்வது  Deicide.
* ஒருவன்  தேனீக்களைக் கொன்றானென்றால்   அது Apicide.
* பறவைகளைக் கொல்வது  Avicide ஆகும். 
* செல்லப் பிராணிகளைக் கொல்வது Lapicide ஆகும்.
* கிருமிகளைக் கொல்ல நாம் பயன்படுத்தும் நாசினியை Germicide என்போம். 
* உயிர் கொல்லி மருந்துகளை Biocide என்போம். 

தலை  நல்லா சுத்துதுல்லா? இன்னும் கொஞ்சம் சொற்கள் இருக்கின்றன. அவற்றைப் போடவில்லை.

பாளை ப.இசக்கிராஜன்.


Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments