
அமெரிக்காவில், எலான் மஸ்க்கின் டெஸ்லா மின்சார வாகன நிறுவனத்திற்கு பெரும் அபராதத் தொகை விதிக்கப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு புளோரிடா மாநிலத்தின் கீ லார்கோ பகுதியில், ஜார்ஜ் மெக்கீ என்ற நபர் தனது டெஸ்லா காரை ஆட்டோபைலட் முறையில் இயக்கியுள்ளார்.
அதன்போது, அவரது தொலைப்பேசி காருக்குள் விழுந்ததால், அவர் அதை எடுக்க குனிந்த போது, குறித்த கார் கட்டுபாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
கட்டுபாட்டை இழந்த கார் அருகில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு வாகனத்தில் மோதியுள்ளதோடு, விபத்தில் இருவர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இச்சம்பவத்தையடுத்து பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்த நிலையில், நீண்ட விசாரணைக்குப் பின், சமீபத்தில் புளோரிடா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
விபத்துக்கான இழப்பீடாக மொத்தம் 329 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதில் டெஸ்லா நிறுவனம் தனது பொறுப்புக்குரிய பங்காக 242 மில்லியன் டொலர்களையும் மீதமுள்ள தொகையை வாகன ஓட்டுநர் வழங்க வேண்டும்.
எவ்வாறாயினும், இந்த தீர்ப்புக்கு எதிராக டெஸ்லா மேல்முறையீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
ibctamil

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments