
அமெரிக்காவில் XFG என்ற வகையிலான கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் அது பற்றி அச்சப்படத் தேவையில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் புதிய வகை கொரோனா தொற்று பரவி வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் XFG என்ற வகையிலான கொரோனா வைரஸ் முதன் முறையாக பரவத் தொடங்கியது.
இது, கடந்த ஏப்ரல் மாதம் முதல், அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களிலும் பரவி வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக, அலபாமா, அலஸ்கா, கலிபோர்னியா, புளோரிடா ஆகிய மாகாணங்களில் XFG வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இது ஏற்கெனவே, பரவிய சார்க் 2 வகை கொரோனாவின் உருமாற்றம் என்று அமெரிக்க மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சளி, காய்ச்சல், உடல்வலி, வாந்தி உள்ளிட்டவை XFG வகை கொரோனா தொற்றின் அறிகுறிகள் எனக்கூறியுள்ள மருத்துவர்கள், இந்த வைரஸ் தொற்றுக்கென தனித்துவமான மருந்துகள் எதுவும் தற்சமயத்திற்கு இல்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.
எனினும், மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும், கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் அமெரிக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments