
இங்கிலாந்தில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2 – 2 என்ற கணக்கில் இந்தியா சமன் செய்த அசத்தியது. குறிப்பாக கடைசி போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா மறக்க முடியாத வெற்றியைப் பெற்றது. அந்த வெற்றிக்கு 9 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய முகமது சிராஜ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
அத்தொடரில் எந்த வேகப்பந்து வீச்சாளர்களாலும் முழுமையாக 5 போட்டிகள் விளையாட முடியவில்லை. ஆனால் அவர்களுக்கு விதிவிலக்காக 5 போட்டிகளிலும் விளையாடிய சிராஜ் அதிக விக்கெட்டுகள் (23) எடுத்து சாதனைப் படைத்தார். அவருடைய ஆட்டத்தை இங்கிலாந்து பயிற்சியாளர் ப்ரெண்டன் மெக்கல்லம் மனதார பாராட்டினார்.
முன்னதாக 2020/21 பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் சிராஜ் இந்தியாவுக்காக அறிமுகமானார். அத்தொடர் துவங்குவதற்கு முன்பாக சிராஜ் தந்தை இயற்கை எய்தினார். ஆனால் அப்போது ஆஸ்திரேலியாவில் இருந்த சிராஜ் லாக் டவுன் விதிமுறைகள் காரணமாக இந்தியாவுக்கு திரும்பி தம்முடைய தந்தையின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார்.
அந்த சோகத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான சிராஜ் காபாவில் 5 விக்கெட்டுகள் எடுத்து 2 – 1 (4) என்ற கணக்கில் ரகானே தலைமையில் இந்தியா கோப்பையை வெல்ல உதவினார். இந்நிலையில் தம்முடைய தந்தை இயற்கை எய்திய போது கூட வீட்டுக்கு செல்லாமல் நாட்டுக்காக விளையாடியவர் தான் முகமது சிராஜ் என்று பரத் அருண் பாராட்டியுள்ளார். இது பற்றி அப்போதைய பவுலிங் பயிற்சியாளரான அவர் பேசியது பின்வருமாறு.
“அந்த சமயத்தில் லாக் டவுன் விதிமுறைகள் காரணமாக இந்திய வீரர்கள் 5 ஸ்டார் ஜெய்ல் போன்ற சூழலில் இருந்தார்கள். மேனேஜர் மட்டுமே வீரர்களை சந்திப்பதற்கான ஸ்பெஷல் அனுமதியைப் பெற்றிருந்தார். எங்கள் யாராலும் மற்றவர்களைப் பார்க்க முடியாதது கடினமான சூழலாக இருந்தது. நாங்கள் மொபைல் மற்றும் வாட்ஸப் அழைப்பில் பேசிக்கொண்டோம்”
“அந்த சமயத்தில் மனிதர்கள் தொடர்பு இல்லாமல் இருந்தது. அப்போது அழுவதற்கு ஒரு தோள்பட்டை கிடைத்திருந்தால் சிராஜுக்கு பெரிய ஆறுதலாக இருந்திருக்கும். ஆனால் அங்கே அவருக்கு ஆறுதலாக ஒரு தோள்பட்டை கூட இல்லை. அப்போது வீடியோ அழைப்பை செய்து நாங்கள் சிராஜிடம் பேசினோம். நீங்கள் இந்தியாவுக்கு செல்ல விரும்புகிறீர்களா? என்று கேட்டோம்”
“அதே சமயம் இந்தியா மிகவும் தொலைவில் இருப்பதால் நம்மால் என்ன செய்ய முடியும்? என்று ரவி சாஸ்திரி என்னிடம் சொன்னார். மறுபுறம் இந்தியாவுக்காக தாம் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதை பார்ப்பதே தம்முடைய தந்தையின் கனவு என்று சிராஜ் சொன்னார். அதனால் “இங்கேயே இருந்து விளையாடுகிறேன்” என்று சிராஜ் சொன்னாது அபராமானது” எனக் கூறினார்.
crictamil

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments