
நவீன காலகட்டத்தில் மனிதர்களின் வாழ்க்கை முறை பெரிய மாறுதல்களை சந்தித்திருக்கிறது. தொழில்நுட்பத்தை அதிகம் சார்ந்து வாழும் தலைமுறைகள் உருவாகிவிட்டன. அந்த வகையில், இந்த காலகட்டத்தில் பலரின் வேலைகளும் மணிக்கணக்கில் கணினியின் முன் அமர்ந்திருக்கும் வகையிலேயே அமைந்திருக்கிறது.
முந்தைய காலகட்டத்தில் உடல் உழைப்பு சார்ந்த பணிகள் அதிகம் இருந்தன, ஆனால் இப்போது குறைவான உடல் உழைப்பு கோரும் பணிகளே அதிமாகிவிட்டன. இதனால், பலரும் ஆரோக்கியமற்று இருக்கிறார்கள். உடல் இயக்கமே இல்லாத நிலையில், பலரும் உடல் பருமன் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். உடல் பருமன் பிரச்னை உலகம் முழுவதும் தற்போது தலைவிரித்தாடுகிறது.
உடல் எடையை குறைத்தால் போனஸ்
அந்த வகையில், சீன நிறுவனம் ஒன்று தங்கள் ஊழியர்களிடம் உடல் எடையை குறைப்பை ஊக்கப்படுத்த, புதிய முன்னெடுப்பில் களமிறங்கி உள்ளது. அதாவது, உடல் எடை குறைப்பில் ஈடுபடும் பணியாளர்களுக்கு போனஸ் வழங்குவதாக அறிவித்துள்ளது. இதற்காக மொத்தம் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது, உடல் பருமனான பணியாளர்கள் உடல் எடையை குறைத்து ஆரோக்கியமாக வாழ்க்கைக்கும் திரும்பலாம், இதன்மூலம் கூடுதலாக பணமும் சம்பாதிக்கலாம் என்பதே இந்த முன்னெடுப்பின் நோக்கமாகும்.
பணியாளர்களுக்கு போட்டி
சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஷென்சென் நகரில் செயல்படும் Arashi Vision என்ற தொழில்நுட்ப நிறுவனமே இந்த முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது. இதன் 'மில்லியன் யுவான் வெயிட் லாஸ் சேலஞ்' இந்நிறுவனம் மக்கள் மத்தியில் பெரும் கவனத்தை பெற்றிருந்தது. ஒவ்வொரு சீசனாக இந்த போட்டி நடைபெறுகிறது. அதாவது, ஒவ்வொரு சீசனிலும் 30 ஊழியர்கள் இந்த வெயிட் லாஸ் சேலஞ்சில் பங்கேற்பார்கள். அவர்களின் எடை ஒவ்வொரு வாரமும் நோட் செய்யப்படும். அவர்கள் இழக்கும் ஒவ்வொரு 0.5 கிலோவிற்கும், அவர்களுக்கு சுமார் 70 அமெரிக்க டாலர்கள் (ரூ. 6,171) கிடைக்கும்.
போட்டியில் அபராதமும் இருக்கு...
பரிசு மட்டுமின்றி இந்த போட்டியில் அபராதம் செலுத்தும் நடைமுறையும் இருக்கிறது. போட்டியில் பங்கெடுத்திருப்பவர்களின் எடை மீண்டும் அதிகரித்தால், அதிகமாகும் ஒவ்வொரு 0.5 கிலோவிற்கும் 800 யுவான் அபராதம் (சுமார் ரூ.10 ஆயிரம்) செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ.2.46 லட்சத்தை அள்ளிய பணியாளர்
இந்நிறுவனத்தில் பணிபுரியும் Xie Yaqi என்ற பணியாளர் மூன்று மாதங்களில் 20 கிலோ எடையை குறைத்துள்ளார், இதற்காக அவருக்கு 20 ஆயிரம் யுவான் (ரூ.2.46 லட்சம்) பரிசாக வழங்கப்பட்டது. அதாது, மேலும் அவருக்கு 'வெயிட் லாஸ் சாம்பியன்' என்ற பட்டத்தையும் அந்நிறுவனம் வழங்கி உள்ளது.
கோடிக்கணக்கில் பரிசளித்த நிறுவனம்
2022ஆம் ஆண்டில் இருந்து இதுவரை மொத்தம் 7 சுற்று போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், 2 மில்லியன் யுவான் (ரூ.2.46 கோடி) அளவிற்கு இதுவரை பரிசுத்தொகையை வழங்கி இருக்கிறது. இந்த போட்டியின் மூலம், ஆரோக்கியமான வாழ்க்கையை முறையை பின்பற்ற தங்களது பணியாளர்களை ஊக்கப்படுத்துகிறோம் என்றும் வேலையை தாண்டி சுய ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுக்கவும் ஊக்கப்படுத்துகிறோம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீனாவில் உடல் பருமன் மற்றும் அதிக எடையுடன் இருப்பது பெரும் பிரச்னையாக வளர்ந்து வருகிறது. இதனால், சீன அரசு அதன் குடிமக்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தேசிய அளவில் ஒரு முன்னெடுப்பை கடந்த 2024ஆம் ஆண்டு எடுத்தது. 2024 ஜூன் மாதத்தில் சீனா, உடல் மேலாண்மை ஆண்டாக அறிவித்தது. அதாவது, மூன்றாண்டுகள் திட்டமான இது விஞ்ஞான ரீதியான உடற்தகுதியை ஊக்கவிப்பதை நோக்கமாக கொண்டிருக்கிறது. இது உடல் எடையை குறைக்க ஊக்குவிக்கிறது.
zeenews

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments