Ticker

6/recent/ticker-posts

பணக்கார திருமணத்தில் ஆதரவற்றவர்களுக்கு கிடைத்த அங்கீகாரம் - வைரல் காணொளி


உத்தரபிரதேசத்தின் காஜிபூர் மாவட்டத்தைச் சேர்ந்த சித்தார்த் ராய், தனது சகோதரியின் திருமணத்தை மிகவும் சிறப்பாக செய்துள்ளார்.

வைரல் காணொளி

உத்தரபிரதேசத்தின் காஜிபூர் மாவட்டத்தைச் சேர்ந்த சித்தார்த் ராய், தனது சகோதரியின் திருமணத்தை அனைவரும் வாயை பிளந்து பார்க்கும் அளவில் மிகவும் சிறப்பாக செய்து இருந்தார்.

பொதுவாக இந்தியால் திருமணங்கள் பெரும் செலவிலும் ஆடம்பரமாக நடைபெறும். திருமணங்கள் என்றால் அப்படி தானே என்பது போல இருக்கும்.

ஆனால் சித்தார்த், இந்த திருமண விழாவை மனிதாபிமான செயலால் சிறப்பித்துள்ளார். அவர் செய்த சிறப்பான திருமணத்திற்கு, உறவினர்கள் மட்டுமல்லாமல் மாவட்டத்தின் பிச்சைக்காரர்கள் மற்றும் வீடற்றவர்களையும் சிறப்பு விருந்தினர்களாக அழைத்தார்.

அவர்களை குடும்ப உறுப்பினர்கள் போலவே அமர வைத்து சுவையான உணவு பரிமாற, இசை மற்றும் நடன விழாக்களில் பங்கேற்க ஊக்குவித்தார்.

திருமண முடிந்தவுடன், அனைவருக்கும் 'ரிட்டர்ன் கிஃப்ட்' கொடுத்து வழி அனுப்பி வைத்தார். சித்தார்த் ராயின் இந்த செயல் சமூக ஊடகங்களில் வைரலாகி, நெட்டிசன்கள் அவருக்கு வாழ்த்து குவித்து வருகின்றனர்.

இதற்கு ஒரு இணையவாசி“இது வெறும் திருமணம் அல்ல, இது சமூகத்திற்கு ஒரு நல்ல பாடம்.”என கருத்து தெரிவித்து உள்ளார். 

manithan

 


Post a Comment

0 Comments