
ஆப்கானிஸ்தானை கடந்த 6 நாள்களில் 3ஆவது நிலநடுக்கம் உலுக்கியிருக்கிறது. அது 5.6 ரிக்டர் அளவில் பதிவானதாக BBC செய்தி கூறுகிறது.
முதல்முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இப்பேரிடர் மீண்டும் நிகழ்ந்திருக்கிறது.
நிலநடுக்கத்தை அடுத்து நங்கர்ஹார் (Nangarhar), குனார் (Kunar) மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் தங்குமிடங்களை விட்டு வெளியேறினர்.
உயிருடற்சேதம் குறித்த உடனடித் தகவல் இல்லை.
ஆனால் காயமுற்ற 17 பேர் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டதாக குனாரிலுள்ள மருத்துவர்கள் BBCஇடம் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (31 ஆகஸ்ட்) ஏற்பட்ட முதல் நிலநடுக்கத்தில் 1,368 பேர் மாண்டனர். 2,180 பேர் காயமுற்றனர்.
2ஆவது நிலநடுக்கம் செவ்வாய்க்கிழமை (3 செப்டம்பர்) நடந்தது.
அதனை தொடர்ந்து வலுவான நில அதிர்வுகள் உணரப்பட்டன.
தேடல், மீட்புப் பணிகள் தொடர்கின்றன.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments