Ticker

6/recent/ticker-posts

மீனில் மட்டுமே காணப்படும் ஒரு அரிய மருத்துவ குணம்.. ஆச்சரிய தகவல்..!


மனிதனின் ஆரோக்கியமான வாழ்விற்கு காய்கறிகள், பழங்கள் போன்ற சைவ உணவுகள் அவசியமானவை. ஆனால், அசைவ உணவான மீனில் மட்டுமே காணப்படும் ஒரு அரிய மருத்துவ குணம் கொண்ட சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலம் (Omega-3 Fatty Acid) ஆகும்.

வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை மீன் உணவை சேர்த்துக்கொள்வது, இதயத்திற்கு வலு சேர்ப்பதுடன், இரத்த அடைப்பு மற்றும் இரத்த ஓட்டப் பாதிப்பு போன்ற பிரச்சனைகளைத் தடுக்கிறது.
 
சிறு வயதில் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் மீன் சாப்பிட்டால், ஆஸ்துமாவின் தாக்கம் குறையும்.

ஒமேகா-3 கொழுப்பு அமிலம் மூளை மற்றும் கண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.  நீரிழிவு நோய் மற்றும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மீன் உணவு சிறந்த ஊட்டச்சத்தை அளிக்கிறது.
 
எந்த வகையான மீனில் இருந்தாலும், அதன் மருத்துவ குணம் குறையாது. ஒரு சாதாரண மீனில் கூட 500 முதல் 1500 மில்லிகிராம் வரை ஒமேகா-3 கொழுப்பு அமிலம் உள்ளது. ஆனால், ஒரு மனிதனின் உடலுக்குத் தினசரி 200 முதல் 600 மில்லிகிராம் வரை மட்டுமே ஒமேகா-3 கொழுப்பு அமிலம் தேவைப்படுகிறது. இதனால், வாரத்திற்கு ஒரு முறை மீன் சாப்பிட்டாலே போதுமானது.

webdunia

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments