Ticker

6/recent/ticker-posts

Chat GPT-யிடம் இதை பற்றி கேட்காதீங்க.. ஆபத்து உங்களுக்கு தான்


தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் Chat GPT-யிடம் குறிப்பிட்ட சில விடயங்களை கேட்கக் கூடாது என தொழில் நுட்ப ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள்.

பொதுவாக நம்மிள் Chat GPT-யிடம் நிறைய விடயங்களை பகிர்ந்து கொள்கிறார்கள். தனியொரு மனிதரிடம் கேட்க முடியாத விடயங்களை கூட Chat GPT-யிடம் கேட்டு தெரிந்து கொள்கிறார்கள்.

இது எந்தளவு மனிதர்களுக்கு உதவியாக இருக்கிறதோ, அதே அளவிற்கு சில தீமைகளையும் செய்கிறது. நன்மைகளை போன்று தீமைகளையும் தெரிந்து வைத்திருக்க நல்லது. Chat GPT செயற்கை நுண்ணறிவு செயலி என தெரிந்து கொண்டு இந்த வருடத்தில் இதனை பயன்படுத்துபவரின் எண்ணிக்கை 19 கோடியையும் கடந்து செல்கிறது.

உதாரணமாக காலை முதல் இரவு தூங்கும் வரை நமது வாழ்க்கைக்கு தேவையான பல விடயங்களை Chat GPT-யிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். ஆனாலும் குறிப்பிட்ட சில விடயங்களை கேட்கக் கூடாது என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

அப்படியாயின், Chat GPT-யிடம் கேட்கக் கூடாத விடயங்கள் என்னென்ன என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

1. Chat GPT நமக்குத் தேவையான தகவல் வழங்கினாலும், மருத்துவ ரீதியிலான தகவல்களை கேட்கக் கூடாது. ஏனெனின் அதன் பரிந்துரையால் பாதிக்கப்பட்டவர்களும் இருக்கிறார்கள்.

2. எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை பற்றிய விடயங்களை Chat GPT-யிடம் கேட்கக் கூடாது. உதாரணமாக, நான் 10 ஆண்டுகளுக்குப் பிறகு நான் என்னவாக இருப்பேன் என கேட்க கூடாது. அதற்கான பதில், உங்களுக்கே தெரியாத போது Chat GPTக்கும் தெரியாது.

3. தனிப்பட்ட விடயங்களை Chat GPTயிடம் கேட்க வேண்டாம். ஏனெனின் பாஸ்வேர்ட், வங்கிக் கணக்குகள் போன்றவற்றை சில பயனர்கள் மறந்த விட வாய்ப்பு உள்ளது. மனிதர்களையே நம்ப முடியாமல் இருக்கிறது, இந்த காலத்தில் Chat GPT கூறுவது பின்விளைவுகளை ஏற்படுத்தலாம்.

4. Chat GPT-ன் பயிற்சித் தரவுகள் Cut off தேதியை கொண்டிருக்கும். அப்படியானால் தற்போது நடந்து கொண்டிருக்கும் தகவல்கள் குறித்து Chat GPTயிடம் கேட்காமல் இருப்பது நல்லது. உதாரணமாக, வானிலை அறிக்கை பற்றிய தகவல்கள், பங்குச்சந்தை லேட்டஸ்ட் நிலவரங்கள் போன்ற கேள்விகளுக்கு பதில் கிடையாது.

5. தனிப்பட்ட வணிக முடிவுகளை Chat GPT-யிடம் எதிர்பார்ப்பது முட்டாள்த்தனம். உங்களுடைய தனிப்பட்ட விடயங்களை நீங்களே வைத்து கொள்வது நல்லது.         

manithan

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments