Ticker

6/recent/ticker-posts

பயன்பாட்டிற்கு வந்த உலகின் மிக நீளமான சுரங்கப்பாதை... எங்கே இருக்கு தெரியுமா...?


உலகின் மிக நீளமான சுரங்கப்பாதை சீனாவில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

வடமேற்கு சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்திற்குட்பட்ட உய்குர் என்ற தன்னாட்சி பகுதியையும், கோர்லா நகரையும் இணைக்கும் விதமாக 324 கிலோ மீட்டர் தொலைவிற்கு பிரமாண்ட சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இதற்காக தியான்ஷான் மலையை குடைந்து 22 கிலோ மீட்டர் தொலைவிற்கு சுரங்கப்பாதை கட்டப்பட்டுள்ளது. உலகின் மிக நீளமான இந்த சுரங்கப் பாதை நேற்று முன்தினம் பயன்பாட்டிற்காக திறந்துவைக்கப்பட்டது.

இந்த சுரங்கப் பாதையால் உரும்கி - யுலி நகரங்களுக்கான பயண தூரம் 7 மணியில் இருந்து 3 மணி நேரமாக குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

news18

 


Post a Comment

0 Comments