Ticker

6/recent/ticker-posts

ராஜகுமாரியின் சுயம்வரம்-112


"
அப்போது தான் நம்ம சின்ன நாட்டாமை கொஞ்சம் வளர்ந்து விட்டதால்  தானும் தன் ஊருக்கு நன்மை செய்திட வேண்டும்.எவ்வழியே செய்வது என்று நம் ஐயா இவர்களின் அருகே இருந்து வினாவினார்.நான் அதைக் கேட்டு ஒரு விளையாட்டாகச் சொன்னேன்.
 
நீங்க செல்லம் ஒரு பெரும் மருத்துவராக இந்த ஊரை மட்டும் இல்லாமல் பலருடைய நோய் தீர்க்கும் மருத்துவராப் பணியாற்றும் அளவு அறிவாளியாகப் படித்து ருங்கள் என்றேன்.

அப்போது நம் ஐயாவும் அதுதானே நாமே நம் 
மக்களைக் காத்திடலாமே சரிதானே குமரா? என்று கேட்டுச் சிரித்தார். உண்மையில் நாங்கள் விளையாட்டாகத் தான் பேசினோம். அதைக் கெட்டியாப் பிடித்த நம் சின்ன நாட்டாமை குமரகுரு நன்றாகவே படிப்பில் கவனம் செலுத்தினார்.

சில பல ஆண்டு அமேரிக்கா போய் அங்கே ஆங்கில வைத்தியம் கற்று பெரும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் குழுவோடு இணைந்து சிலரோட உயிர்களையும் காப்பாற்றி உள்ளார்.

அதற்குப் பாராட்டு பதக்கம் எல்லாம் கிடைத்தது அது தான் சொல்வார்களே அரசே  எம் .பி  .பிஎம்மே என்னமோ பேர் எல்லாம்.

அத்தனையிலும் தம்பி குமரன் கோல்மிடல் ஆமாம் என்று சொல்லி ஆனந்தமாகப் புன்னகைத்தார்.

கணக்கப் பிள்ளை   என்ன?  அது குமரன்  எம்பி  பியெஸ்சா?  என்று வாய்க்குள்ளே சரவணன் கூறிய ஒலி அவனை அறியாமலே வெளியே வந்து விட்டது.

எல்லோர் பார்வையும் சரவணனின் பக்கம் திரும்பிடவே வெட்கத்தோடு குமரனைப் பார்த்தான்.குமரன் மெதுவாகப் புன்னகைத்தான்.

அப்போது கணக்கப் பிள்ளை அட ஆமாம் மருத்துவர் தம்பி உங்க நண்பன் அம்புட்டு படிச்சி இருக்காரு.

இங்கிலிஷ் அழகாகப் பேசுவார்  அந்தப் படிப்பு முடிய வீட்டுக்கு வந்து ஒருமாதம் தான் ஓய்வு எடுத்தார்.

அடுத்த மாதமே கேர்ளா போய் புகழ்பெற்ற நாட்டு வைத்தியரிடம் மாணவனா இணைந்து மூன்று வருடம் நாட்டு வைத்தியம் கற்று நேர்ச்சி பெற்று வீட்டுக்கு வந்தார் .

அப்போதுதான் மகாராணியின் அறிப்பு  எங்கள் பெரிய ஐயா இவர்களின் காதுக்கு வரவே குமரனை அனுப்பி வைத்தார்.

குமரன் இங்கு வந்த பின்னர் மருத்துவ மனை சீர் திருத்தி குமரன் ஐயா வரவுக்காக மருத்துவ மனையும் மக்களும் காத்திருக்கின்றன அரசே என்று கூறினார் கணக்கப்பிள்ளை.

(தொடரும்)

ஆர் .எஸ் . கலா

 


Post a Comment

0 Comments