Ticker

6/recent/ticker-posts

20 லட்சம் ஆண்டுகளாக ஒரு சொட்டு மழை கூட பெய்யாத இடம்! பூமியில் இப்படியொரு அதிசயமா?


மலைகளின் உச்சியில் இருக்கும் குளிர்ந்த மற்றும் அடர்த்தியான காற்று, புவிஈர்ப்பு விசையினால் மிக வேகமாக பள்ளத்தாக்கை நோக்கி கீழ்நோக்கிப் பாயும்.

அண்டார்டிகாவில் உள்ள 'மெக்முர்டோ உலர் பள்ளத்தாக்குகள்' தான் உலகிலேயே மழையை பார்த்திடாத பகுதியாக உள்ளது. இதற்கான காரணங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக உள்ளன.

அண்டார்டிகா என்றாலே நமக்கு பனிப்பாறைகள்தான் நினைவுக்கு வரும். ஆனால், இந்த உலர் பள்ளத்தாக்குகளில் பனியோ, ஈரம் நிறைந்த மண்ணோ கிடையாது.

இந்த பள்ளத்தாக்குகளைச் சுற்றி மிக உயரமான மலைகள் அமைந்துள்ளன. கடலில் இருந்து வரும் ஈரப்பதம் நிறைந்த மேகங்களை இந்த மலைகள் தடுத்து நிறுத்திவிடுகின்றன.

மேகங்கள் மலைகளின் மறுபக்கத்திலேயே மழையாகவோ அல்லது பனியாகவோ பொழிந்துவிடுகின்றன. இதனால் பள்ளத்தாக்கிற்குள் நுழையும் காற்று ஈரப்பதம் ஏதுமில்லாத வெறும் வறண்ட காற்றாக மட்டுமே இருக்கிறது.

மலைகளின் உச்சியில் இருக்கும் குளிர்ந்த மற்றும் அடர்த்தியான காற்று, புவிஈர்ப்பு விசையினால் மிக வேகமாக பள்ளத்தாக்கை நோக்கி கீழ்நோக்கிப் பாயும். இந்த காற்றானது மணிக்கு சுமார் 320 கிலோமீட்டர் வேகத்தில் வீசும். இவ்வளவு அதிவேகத்தில் காற்று வீசும்போது, அங்கு இருக்கும் சிறிதளவு ஈரப்பதத்தையும் அது ஆவியாக்கி இழுத்துச் சென்றுவிடுகிறது. இதனால் மேகங்கள் உருவாக வாய்ப்பே இல்லாமல் போகிறது.

இங்கு நிலவும் கடும் குளிரினால் காற்றில் நீராவியைத் தக்கவைத்துக் கொள்ளும் திறன் மிக மிகக் குறைவு. இதனால் மேகங்கள் உருவாவதற்கான சூழல் அங்கு எப்போதும் ஏற்படுவதில்லை.

இத்தகைய காரணங்களால் அண்டார்டிகாவின் 'மெக்முர்டோ உலர் பள்ளத்தாக்குகள்' மழையை பார்த்திராத பிரதேசங்களாக உள்ளன.

news18

 


Post a Comment

0 Comments