Ticker

6/recent/ticker-posts

1330 குறள்களுக்கு குறள்வடிவில் விளக்கம்-20


குறள் 98:

சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பம் தரும்.

கடுமையற்ற இன்சொற்கள் எக்காலும் இன்ப நிறைவும் புகழும் தரும்

குறள் 99:

இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல் வழங்கு வது?

இன்சொற்கள் நன்மை அறிந்தபின்பும் புண்படுத்தும் வன்சொற்கள் பேசுவ தேன்?

குறள் 1௦௦:

இனிய உளவாக இன்னாத கூறல் கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.

இனியசொல் உள்ளபோது வன்சொல்லைக் கூறல் கனியிருக்க காய்பறிக்கும் போக்கு.

செய்ந்நன்றியறிதல்

குறள் 101:

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது.

நன்மையே செய்யாத மாந்தருக்குச் செய்கின்ற நன்மைக்கு ஈடோ உலகு?

(தொடரும்)

 


Post a Comment

0 Comments