
இந்தியாவின் கேரள மாநிலத்தில் திருமணமான இளைஞர், காதல் மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
காதலித்து திருமணம்
கேரள மாநிலம் மலப்புரத்தில் உள்ள பெரிந்தல்மன்னாவைச் சேர்ந்தவர் வைஷ்ணவி (26). இவரும் தீக்ஷித் என்பவரும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.
இந்த நிலையில் வைஷ்ணவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக் கூறி தீக்ஷித் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
மயங்கிய நிலையில் அழைத்துச் செல்லப்பட்ட வைஷ்ணவிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால் அவர் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
பிரேத பரிசோதனை
இதனையடுத்து அவரது மரணத்தில் சந்தேகமடைந்த குடும்பத்தினர் பிரேத பரிசோதனை செய்யக் கோரினர். பின்னர் திருச்சூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது வைஷ்ணவி கழுத்தை நெரித்து கொல்லப்பட்டது தெரிய வந்தது.
இதுகுறித்து தீக்ஷித்திடம் விசாரித்தபோது, அவர் சில பிரச்சனைகள் தொடர்பாக ஏற்பட்ட தகராறின்போது கோபத்தில் கொலை செய்துவிட்டதாக ஒப்புக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர் மீது BNSயின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை
lankasri

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments