Ticker

6/recent/ticker-posts

சிங்கப்பூரில் பெண்ணின் படுக்கையறைக்குள் நுழைந்து மானபங்கம் செய்ய முயன்ற இந்திய ஆடவருக்குச் சிறை


பெண்ணின் படுக்கையறைக்குள் நுழைந்து அவரை மானபங்கம் செய்ய முயன்ற இந்திய ஆடவருக்குச் சிறை தண்டனை விதித்துள்ளது சிங்கப்பூர் நீதிமன்றம்

சிங்கப்பூரில் அமெரிக்கப் பெண்ணை மானபங்கம் செய்ய முயன்ற குற்றத்திற்காக இந்தியாவைச் சேர்ந்த 41 வயது திருப்பதி மோஹன்தாஸுக்கு (Thirupathi Mohandas) 13 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அந்த 35 வயதுப் பெண்ணை ஒருமுறை சன்னல் வழியாக படுக்கையறையில் நிர்வாணமாகப் பார்த்த அவர், அவரை மீண்டும் மீண்டும் பார்க்கச் சென்றிருக்கிறார்.

ஒருமுறை பெண்ணின் வீட்டின் மாடத்தின் மூலம் படுக்கையறைக்குள் நுழைந்திருக்கிறார்.

பெண்ணின் காலைத் தொடச் சென்றபோது பெண் கூச்சலிட்டுப் பாதுகாவலரை அழைத்தார்.

ஆனால் திருப்பதி தப்பிவிட்டார்.

பின்னர் மற்றொரு முறை பெண்ணைக் காணச் சென்ற அவர் 3 மணி நேரம் அந்த வீட்டில் மறைந்திருந்து அவரைப் பார்த்துக்கொண்டிருந்தார் என்று அவர் ஒப்புக்கொண்டார்.

மூன்றாம் முறை அவர் அந்த வட்டாரத்தில் சுற்றித் திரிந்த சமயம் காவல்துறையிடம் பிடிபட்டார்.

பெண்ணை மானபங்கம் செய்தது, படுக்கையறைக்குள் திருட்டுத்தனமாக அத்துமீறி நுழைந்தது ஆகிய குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார்.

திருப்பதி சிங்கப்பூர் கட்டுமான ஊழியராகப் பணிபுரிந்தவர் என்று தெரிவிக்கப்பட்டது

nambikkai

 


Post a Comment

0 Comments