
தேசிய மகளிர் ஆணைக்குழு இலங்கையின் சுயாதீன ஆணையங்களில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு முன்பு ஆணைக்குழுவிற்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டதாகவும், இப்போது அதன் ஸ்தாபனம் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதமர் அமரசூரிய தெரிவித்தார்.
இது அரசாங்கத்தின் கீழ் ஏற்கனவே நிறுவப்பட்ட 09 சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு மேலதிகமானது என்றும் அவர் மேலும் கூறினார்.
இன்று (09) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே பிரதமர் ஹரிணி அமரசூரிய இவ்வாறு தெரிவித்தார்.
tamilmirror

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments