
கோயம்புத்தூர் சரவணம்பட்டியில் உள்ள ரூபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 08&09-10-2025 ஆகிய இரண்டு நாட்கள் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் திருக்குறள் நுண் பயிற்சி வகுப்பு இனிதே நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளியின் தாளாளர் நூலாசிரியர் கவிஞர் சுகுமார் அவர்கள் தலைமை தாங்கினார்.
குறளாசான் தமிழ்ச் செம்மல் முனைவர் மு.க. அன்வர் பாட்சா அவர்கள் பங்கேற்று மாணவர்களுக்கு வாழ்வியல் சிந்தனைகளுடன் திருக்குறள் நெறியுடன் அவர்கள் மனங்கொள்ளும் வகையில் நுண் பயிற்சி வகுப்பை நடத்தினார்.

நினைவாற்றல் பயிற்சிக்கான வழிகளைக் கூறி உற்சாகமூட்டினார்.
மாணவர்கள் ஆர்வத்துடன் கவனித்து தகவல்களைக் குறிப்பெடுத்து கொண்டனர்.
ரூபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் திருமதி கற்பகஜோதி உள்ளிட்ட ஆசிரியர்கள் திருமதி ஜெயந்தி திருமதி மாசிலாமணி திருமதி சரண்யா ஆகியோர் வாழ்த்துரைத்தனர்.
நிறைவாக மாணவர்களின் நன்றி நவிலலுடன் குறள் வகுப்பு சிறப்பாக நிறைவு பெற்றது.

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments