Ticker

6/recent/ticker-posts

பிலிப்பைன்ஸில் மீண்டும் நிலநடுக்கம்


பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு நிலையம் (USGS) குறிப்பிட்டது.

பொருட்சேதம், உயிருடற்சேதம் குறித்து உடனடித் தகவல் இல்லை.

நிலநடுக்கம் சுமார் 30 விநாடிகளுக்கு நீடித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

அதிகாரிகள் நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதத்தை ஆராய்கின்றனர்.

பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ (Mindanao) பகுதியில் நேற்று முன்தினம் இரு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.

முதல் நிலநடுக்கம் 7.4 ரிக்டர் அளவில் இருந்தது.

இரண்டாவது முறை அது 6.7 ரிக்டர் அளவில் பதிவானது.

பசிபிக் "நெருப்பு வளையத்தில்" (Ring of Fire) பிலிப்பைன்ஸ் அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.

nambikkai

 


Post a Comment

0 Comments