
இஸ்லாமிய பொற்காலம் (Islamic Golden Age) என்பது இஸ்லாமிய உலகின் அறிவியல், கலை, தத்துவம், மருத்துவம், கணிதம், வானியல் போன்ற துறைகளில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்ட காலகட்டமாகும்.
இது சுமார் கி.பி. 8ம் நூற்றாண்டு முதல் 13ம் அல்லது 14ம் நூற்றாண்டு வரை நீடித்தது.
இஸ்லாமிய பேரரசின் விரிவாக்கத்தால் கிரேக்க, ரோமன், இந்திய, பாரசீக அறிவு அறபு மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டு, புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுத்தது.
பாக்தாத்தின் "பைத்துல் ஹிக்மா" போன்ற அறிவு மையங்களில் அரிஸ்டாட்டில், பிளேட்டோ, ஐரானிக், சுக்ராதீஸ் போன்ற கிரேக்க நூல்கள் அறபு மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டன.
அன்றைய ஆட்சியாளர்கள் அறிவியலாளர்களை ஊக்குவித்தனர். குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் இஸ்லாமியக் கோட்பாடுகள் அறிவு தேடலையும், பரிசோதனைகளையும் ஊக்குவித்தன.
ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்காவை இணைத்த வர்த்தகம் மற்றும் அறிவுப் பரிமாற்றம் ஐரோப்பிய மறுமலர்ச்சிக்கும்,
அறிவுபூர்வ அறிவியல் புரட்சிக்கும் அடிப்படையாக அமைந்தது.
11ம் நூற்றாண்டு முதல் அறபு மொழியில் அறிவியல், தத்துவம், மருத்துவம், கணிதம், வானியல், இலக்கியம் உள்ளிட்ட பல துறைகளில் ஆயிரக்கணக்கான நூல்கள் எழுதப்பட்டு வெளியிடப்பட்டன.
இங்கிலாந்தில், முதன் முதலாக அச்சு இயந்திரத்தை நிறுவி நூல்களை அச்சடித்து வெளியிட்டு அச்சுத்துறையில் ஒரு புரட்சியை உண்டாக்கியவர் வில்லியம் காக்ஸ்டன் என்பவராவார்.
இவர் அச்சு இயந்திர அமைப்பை தனது முயற்சியால் நவீன யுக்திகளைக் கையாண்டு முன்னேறி அச்சு இயந்திரத்தைக் உருவாக்கினார்.

1476ம் ஆண்டு காக்ஸ்டன் வெஸ்ட் மினிஸ்டர் என்ற இடத்தில் நவீன சாதனங்களுடன் நவீன அச்சு இயந்திரம் ஒன்றை அமைத்தார்.
தனது அச்சகத்தில் முதலாவது நூலான “The Dicts or Sayings of the Philosophers” என்ற நூலை அச்சிட்டு வெளியிட்டார்.
அவர் வெளியிட்ட முதல் நூல் பிரெஞ்சு மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்ட “The Dicts and Sayings of the Philosophers” என்ற நூலாகும். இது ஆங்கில மொழியில் வெளிவந்த மிக முக்கியமான மொழிபெயர்ப்பு நூல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
11ம் நூற்றாண்டில் “Mukhtar al-Hikam wa-Mahasin al-Kalim” என்ற நூலை, அபு அல்-வஃபா அல்-முபஷ்ஷிர் இபின் ஃபாதிக் (Abu al-Wafa' al-Mubashshir ibn Fatik) என்பவர் அறபு மொழியில் எழுதினார். இது கிரேக்க, பாரசீக, இந்திய, அரேபிய தத்துவஞானிகளின் புகழ்பெற்ற தத்துவ வார்த்தைகள், அறிவுரைகள், அறிவார்ந்த கதைகளின் தொகுப்பாகும்.
பண்டைய தத்துவஞானிகளான சோக்ரடீஸ், அரிஸ்டாடில், பிளேட்டோ, டயோஜெனீஸ், அலெக்சாண்டர் போன்றோர் பற்றிய சுருக்கமான வாழ்க்கை வரலாறும், அவர்களது முக்கியமான தத்துவ வார்த்தைகளும் இந்நூலில் அடங்கியுள்ளன.
அசல் அறபு மொழியிலிருந்து,ஸ்பானிஷ் மொழிக்கு 13ம் நூற்றாண்டில் மொழிபெயர்க்கப்பட்ட இந்நூல்,14ம் நூற்றாண்டில் ஸ்பானிஷிலிருந்து பிரெஞ்சு மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டு, அதன் பின்னர் இதனை பிரெஞ்சிலிருந்து ஆங்கிலத்திற்கு King Edward IV-இன் மனைவியின் சகோதரரான Anthony Woodville Earl Rivers என்பவர் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தார்.
ஆங்கிலேய அச்சுத்தொழிலின் தந்தை என்று போற்றப்படும் William Caxton இந்த நூலை 1477 நவம்பர் 18 அன்று வெஸ்ட்மினிஸ்டரிலிருந்த தனது அச்சகத்தில் அச்சிட்டார்; இதுவே இங்கிலாந்தில் முதலாவது அச்சிடப்பட்ட நூலாகும்.
இது இடைக்கால ஐரோப்பாவில் மிகவும் பிரபலமான நூலாக இருந்தது.
ஷேக்ஸ்பியர், சாஸர் போன்ற எழுத்தாளர்களும் இதைப் படித்து பயன்படுத்தி இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
மொத்தம் சுமார் 75 தத்துவஞானிகளின் வார்த்தைகள் இடம்பெற்றிருக்கும். முதலில் 74 பேர், பின்னர் Caxton தானாகவே சாக்ரடீஸ் பகுதியைச் சேர்த்துக் கொண்டார்.
தமிழில் இந்த நூலை 2004ம் ஆண்டில் காலச்சுவடு பதிப்பகத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டவர் கோ. சுந்தரலிங்கம் என்பவராவார். “தத்துவஞானிகளின் சொல்வளம்” அல்லது “ஞானிகளின் சொற்கள்” என்ற தலைப்பில் இந்நூல் தமிழில் வெளியானது.
செம்மைத்துளியான்

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments